அவுஸ்ரேலியாவில் பணிபுரிகின்ற அனைவருக்கும் வங்கிக்கணக்கு ஒன்று தேவை.
ஆனால் எந்த வங்கியில் எப்படியான வங்கிக் கணக்கை ஆரம்பிக்க வேண்டுமென்பதில் இங்கு புதிதாக குடியேறிய பலருக்கும் குழப்பம் இருக்கலாம்.
சம்பியாவிலிருந்து ஆஸ்திரேலியாவில் குடியேறிய ரொபேர்ட்டிற்கு அப்படித்தான் இருந்தது. இங்கு புழக்கத்திலிருக்கும் பலவிதமான பண கொடுப்பனவு முறைகள் இவரை ஆச்சரியத்திற்குள்ளாக்கியதாக சொல்கிறார்.
ஒவ்வொருவரும் தமக்கான வங்கிக் கணக்கை வைத்திருப்பது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் உதவுகின்ற ஒன்று என்கிறார் Australian Bankers’ Associationஇன் நிறைவேற்று அதிகாரி Diane Tate.
உலகில் வங்கிச் சேவையில் சிறந்து விளங்கும் நாடுகளில் அவுஸ்ரேலியாவும் ஒன்று என்பதால் வரவு செலவுகளை இலகுவாகக் கையாள முடியும் என்கிறார் Diane Tate.
அவுஸ்ரேலியாவைப் பொறுத்த வரை ஆகிய ANZ, Westpac, Commonwealth, NAB 4 வங்கிகளின் ஆதிக்கம் தான் அதிகளவில் காணப்படுகின்றது. ஆனால் இவற்றை விடவும் இன்னும் பல சிறிய மற்றும் பெரிய வங்கிச் சேவைகளும் இருக்கின்றன.