காரில் ‘சீட் பெல்ட்’ போடாமல் பயணம் செய்த ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சனை அவுஸ்ரேலிய காவல் துறையனர் விசாரிக்கவுள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் கடந்த நவம்பர் 14ல், ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்ரிக்கா, அவுஸ்ரேலியா அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியை காண முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ஷேன் வார்ன், கெவின் பீட்டர்சன், மைக்கேல் சிலாட்டர், மார்க் டெய்லர், இயான் ஹீலி ஆகியோர் காரில் பயணம் செய்துள்ளனர்.
காரை மார்க் டெய்லர் ஓட்டியுள்ளார். அவரும் இயான் ஹீலியும் சீட் பெல்ட் அணிந்துள்ளனர். ஆனால் பீட்டர்சன், வார்ன், சிலாட்டர் ஆகியோர் சீட் பெல்ட் அணியிவில்லை. அவுஸ்ரேலியாவில் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் டிரைவர் உட்பட அனைவருக்கும் 300 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.
இதை உணராத ஷேன் வார்ன், பயணத்தின் போது எடுத்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்தில் அப்லோடு செய்துள்ளார். இதை பார்த்த ஆஸ்திரேலிய போலீசார், அவர்களை மூவரையும் விசாரனை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,’ எங்களிடம் வார்ன், பீட்டர்சன் உள்ளிட்டோர் காரில் சீட் பெல்ட் அணியாமல் காரில் பயணம் செய்த வீடியோ ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கவுள்ளது. அதில் அவர்கள் ஒத்துழைப்பை பொறுத்து தண்டனை இருக்கும். சட்டம் அனைவருக்கும் ஒன்று தான்.’ என்றார்.