ஜெனிவாவில் இடம்பெற்று வரும் 39வது கூட்டத்தொடத் தொடரில் கலந்து கொள்ளும் பொருட்டு அங்கு செல்வதற்கான விசா அனுமதி தமக்கு மறுக்கப்பட்டதாக, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திவரும் தொடர் போராட்டம் ;நேற்று 557 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்றைய தினம் அவர்களால் முல்லைத்தீவில் ஊடக சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன்போதே, முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி ஈஸ்வரி இதனை தெரிவித்துள்ளார். இதனால், ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டத்தொடரில் தம்மால் கலந்து சாட்சியமளிக்க ...
Read More »செய்திமுரசு
குடும்பத்தையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் 6 நாட்கள் தங்கிய குடும்பத்தலைவர்!
அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார். பெர்த்தில் உள்ள வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஐந்து சடலங்களையும் கைப்பற்றிய நிலையில். இறந்தவர்களின் பெயர்கள் மரா (41), பெவர்லி குயின் (73) அலீஸ் (2), பீட்ரிக்ஸ் (2) மற்றும் சரோலேட் (3) என தெரியவந்தது. இந்நிலையில் ஐந்து பேரையும் கொலை செய்ததாக மராவின் கணவர் ஆண்டனி ராபர்ட் (24) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். கூர்மையான ...
Read More »தமிழ் பண்பாட்டின் சின்னமாக விளங்கவல்லவர் எவரோ அவரே தலைமைதாங்க முடியும்!
“கட்சி அரசியலை விட்டு எமது தமிழ் மக்கள் பேரவையை ஒரு உண்மையான மக்கள் பேரியக்கமாக மாற்ற உள்நாட்டு, வெளிநாட்டு தமிழ் மக்களை ஒன்றிணைத்து அரசாங்கத்துடன் எமக்கேற்ற தீர்வு ஒன்றினை முன்வைத்துப் பெற முயற்சிப்பது” என்று தனக்கு இருக்கக்கூடிய நான்கு தெரிவுகளில் நான்காவதாக இத்தெரிவை திரு.விக்னேஸ்வரன் முன்வைத்தார். இதுவே தனது அரசியல் பயணத்திற்கான தெரிவென்றும் பிரகடனப்படுத்தினார். மேற்படி தனது நிலைப்பாட்டை கடந்த வாரம் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் அதன் இணைத் தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் திரு.விக்னேஸ்வரன் அறிக்கை வாயிலாக தெரிவித்தார். தளபதிகளும், பிரதானிகளும் குதிரை ...
Read More »ஐஎஸ்ஐ தான் உலகின் சிறந்த உளவுத்துறை!-இம்ரான் கான்
ஐஎஸ்ஐ தலைமைச் செயலகத்தை முதன் முதலாகப் பார்வையிட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் , ஐஎஸ்ஐ உலகிலேயே சிறந்த உளவு ஸ்தாபனம் என்றும் அதுவே தங்களது முதல்வரிசை பாதுகாப்பும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானின் இண்டெர் சர்வீஸஸ் இண்டெலிஜென்ஸ் என்பதுதான் ஐஎஸ்ஐ அழைக்கப்படுகிறது. இதற்கு இம்ரான் தன் அமைச்சரவை சகாக்களுடன் வருகை தந்தபோது அதிகாரிகள் பிரதமர் இம்ரானிடம் அவர்களது பல்வேறு பாதுகாப்புத் திட்டங்களை விளக்கினர். “பாகிஸ்தான் பிரதமர் ஐஎஸ்ஐ தேசப்பாதுகாப்புக்கு ஆற்றும் சேவையைப் பாராட்டியுள்ளார், குறிப்பாக பயங்கரவாத எதிர்ப்புச் செயல்பாடுகளில் ஐஎஸ்ஐ-யின் பாராட்டுக்குரிய செயல்களை விதந்தோதினார். ...
Read More »அவுஸ்திரேலியாவில் அகதி ஒருவர் தற்கொலை!
மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாமில் தங்கியிருந்த அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த அகதியின் குடும்பத்தினர் அவுஸ்திரேலிய அரசுக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான ஈராக் பின்னணி கொண்ட Saruuan Aljhelie, பெர்த்திற்கு கிழக்காக அமைந்திருக்கும் Yongah Hill குடிவரவு தடுப்பு முகாமில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டநிலையில், கடந்த 2ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களின் பின் உயிரிழந்தார். சிட்னி விலவூட் தடுப்பு முகாமிலிருந்து Yongah ...
Read More »ஹபீஸ் சயீத்தின் இயக்கம் தனது பணிகளை மேற்கொள்ள அனுமதி!
ஹபீஸ் சயீத்தின் ஜேயூடி இயக்கம் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் தனது செயல்பாடுகளை மேற்கொள்ள பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத், ஜே.யூ.டி என்ற அமைப்பையும் அந்த அமைப்பு மூலமாக தொண்டு நிறுவனம் என்ற பெயரில் பலாஹி இன்சனியாத் பவுண்டேஷன் (FIF) என்ற அமைப்பையும் நடத்தி வந்தார். ஐக்கிய நாடுகள் அவையின் தடைப்பட்டியலிலும் உள்ள ஹபீஸ் சயீத்தின் இயக்கங்களுக்கு பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது. ...
Read More »புலம்பெயர் தேசத்தில் இருந்து தாயகம் திரும்பியவர் சிறிலங்கா காவல் துறையால் தாக்கப்பட்டார்!
சுவிஸ் நாட்டிலிருந்து நாடு திரும்பிய தமிழ் குடும்பத்தலைவர் ஒருவர், சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் தடுத்து வைத்துத்தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. உடுவில் பகுதியைச் சேர்ந்தவரும் சுவிஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவருமான மொறிஸ் அருணாச்சலம் பிரகாஷ் (வயது -61) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். சிங்கள மற்றும் தமிழ் காவல் துறை உத்தியோகத்தர்கள் இருவரே தன்னைத் தாக்கியதாக குடும்பத் தலைவரால் சுன்னாகம் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. அவரால் குற்றஞ்சாட்டப்படும் ...
Read More »இடையூறு விளைவித்த இரு இராணுவ வீரர்களை மடக்கி பிடித்த மக்கள்!
பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் ...
Read More »சித்தார்த்தனும் செல்வமும் என்ன செய்யப் போகிறார்கள்?
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான உறவு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பிரிவுக்குப் பின்னர், எவ்வாறான பாதையைத் தேர்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பினரும் விக்னேஸ்வரனும் ஓரளவுக்குத் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டார்கள். உறவை ஒட்டுமொத்தமாக முறித்துக் கொள்வதற்கு முன்னரான, சம்பிரதாயபூர்வ சந்திப்புக்கான காத்திருப்பு மட்டுமே இப்போதுள்ளது. டெல்லிப் பயணத்தை முடித்துக்கொண்டு, இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும், ‘கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரன்’ என்கிற அடிப்படையிலான இறுதிச் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள், ...
Read More »படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து கைது.!
படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். மாலைதீவில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை திங்கட்கிழமை அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து ...
Read More »