அவுஸ்திரேலியாவில் மொத்த குடும்பத்தையும் கொடூரமாக கொலை செய்த கொலையாளி பொலிசில் சரணடைந்துள்ளார்.
பெர்த்தில் உள்ள வீட்டில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் சில தினங்களுக்கு முன்னர் சடலமாக கிடந்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் ஐந்து சடலங்களையும் கைப்பற்றிய நிலையில். இறந்தவர்களின் பெயர்கள் மரா (41), பெவர்லி குயின் (73) அலீஸ் (2), பீட்ரிக்ஸ் (2) மற்றும் சரோலேட் (3) என தெரியவந்தது.
இந்நிலையில் ஐந்து பேரையும் கொலை செய்ததாக மராவின் கணவர் ஆண்டனி ராபர்ட் (24) காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தனது மனைவி, மாமியார் மற்றும் மூன்று குழந்தைகளை ஆண்டனி கொன்றது தெரியவந்துள்ளது.
ஐந்து பேரையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் ஆறு நாட்கள் ஆண்டனி தங்கியிருந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் ஆண்டனி சில காலமாக நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்துள்ளது.
ஆண்டனியிடம் முழுமையாக விசாரணை முடிந்த பின்னரே கொலைக்கான விரிவான காரணம் தெரியவரும்.
Eelamurasu Australia Online News Portal