பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.இன்று அதிகாலை வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட வீட்டு உரிமையளரகளின் அலறல் சத்தத்தை கேட்ட அயல் வீட்டார்கள் குறித்த இரு இராணுவத்தினரை பிடித்து
காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இராணுவத்தினர் தொடர்ந்தும் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவந்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தும் போது, ஆதாரத்துடன் தெரிவிக்குமாறு கூறப்பட்ட நிலையில் இன்று பொதுமக்கள் ஆதாரத்துடன் இரு இராணுவ வீரர்களையும் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
மக்கள் குடியிருப்புக்குள் இரணுவமுகாம் இருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் மேலும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முழங்காவில் காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 Eelamurasu Australia Online News Portal
Eelamurasu Australia Online News Portal
				