இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமையும், மறுநாள் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாள் மாதர் முன்னணி, வாலிப முன்னணி ஆகிய மாநாடுகளும், இரண்டாவது நாள் பேராளர் மாநாடும் நடைபெறவுள்ளன. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாதர் முன்னணித் தலைவர் திருமதி மதினி நெல்சன் தலைமையில் மாதர் முன்னணி மாநாடு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அதே மன்றத்தில் மாலை 5 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ...
Read More »செய்திமுரசு
ஜனாதிபதித் தேர்தலில் போடியிடுவதா இல்லையா ?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போடியிடுவதா இல்லையா என்பதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொள்ளும் தீர்மானத்திலேயே உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனவுக்கும் ஊடக பிரதானிகளுக்குமான விசேட சந்திப்பொன்று சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த சந்திப்பில் சிறிலங்கா ஜனாதிபதி மேலும் தெரிவித்த சில விடயங்களாவன : * நாட்டின் ஸ்திரத் தன்மையின்மைக்கு 19 ஆவது அரசியல் திருத்தமே காரணமாகும். ஆகவே அடுத்து எவர் ஆட்சிக்கு வந்தாலும் அதனை நீக்க ...
Read More »மாற்று கூட்டணி அமைப்பதில் உள்ள பிரதான தடை எது?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி அமைவதில் தடைகள் உள்ளமைக்கு காரணம், ஒரு தரப்பினர் தமது தனிப்பட்ட அடையாளம் அழிந்து விடுமோ என்று எண்ணுவதே ஆகும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தற்போதைய தமிழர் அரசியல்களம் தமிழர்களின் உரிமையை பெறுவதற்கு சாதாகமானதாக உள்ளதா? பதில்:-ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இலங்கை இருந்தபோது நிர்வாக வசதி கருதி இந்நாட்டில் ...
Read More »ஆஸ்திரேலியா பயிற்சியாளரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், ஜாஸ் பட்லரை புதிய டோனி என கூறினார். இதனையடுத்து ஜஸ்டீனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகளை போல, இந்த இரு அணிகளும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரை பாராட்டி பேசினார். அவர் கூறுகையில், ‘பட்லர் சிறந்த வீரர். அவரது பேட்டிங் எனக்கு மிகவும் ...
Read More »தேசிய அளவில் பரிணமித்த கல்முனை விவகாரம்!
“கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தீவிரமடைந்து, மூவின மக்களிடையேயும் மனக் கசப்பையும் வெறுப்புணர்வையும் வளர்த்துச் செல்கின்ற ஒரு மோசமான நிலைமை உருவாகி இருந்த போதிலும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் இந்த விடயத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்து வருவது கவலைக்குரியது.” கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டமும், அதனை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டமும் இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு மோசமடைந்து செல்வதைக் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. இந்த செயலகத்தை முழுமையானதொரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை மூன்று ...
Read More »ஈரானின் ஆன்மீகதலைவரிற்கு எதிராக தடை
ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளார். புதிய தடைகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். புதிய தடைகள் காரணமாக பில்லியன் டொலாகள் பெறுமதியான ஈரானின் சொத்துக்கள் முடக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்தவாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்கான பதில் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தடை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் ஈரான் கடைப்பிடிக்கும் மோதல் போக்கிற்கு இறுதியில் கமேனியே காரணம் என ...
Read More »நானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத்தயார்!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,“பிரபலமான பௌத்த பிக்கு ஒருவர், என்னை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டார். கட்சி முடிவு செய்து எனக்கு வேட்புமனுவை வழங்கினால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். எனக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டால், ஜனாதிபதித் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்று, எனக்குத் தெரியும். இரண்டு தரப்புகளில் இருந்தும் என்னால் வாக்குகளைப் பெற முடியும். கடற்றொழில் அமைச்சையும், ...
Read More »கூட்டமைப்பின் வழமையான கையாலாகாத தன்மை!
கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். மிகவும் இலகுவான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டிய கல்முனைப் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம், இன்று இவ்வளவு தூரத்துக்கு வளர்ந்து இனங்களுக்கிடையேயான முறுகலை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது. இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; கடந்த மாகாண சபையில் பதினொரு உறுப்பினர்களைக் ...
Read More »அவுஸ்திரேலியாவில் இருந்து தாயகம் நோக்கி சிறகடித்த சிட்டுக்குருவி !
அவுஸ்திரேலிய தம்பதி ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட நிலானி எனும் பெண், பல வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார். 34 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்த மகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. 1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை நோக்கி சென்ற மகளே தற்போது இலங்கையில் தாயை தேடி வந்துள்ளார். வறுமையின் காரணமாக குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுத்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கு ...
Read More »உத்தரபிரதேசத்தில் எருதுகளுக்கு பதிலாக ஏர்கலப்பையில் பெண்கள் !
உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுதனர். இதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல்வேறு கிராமங்களிலும், முக்கிய நகரங்களிலும் தண்ணீர் இன்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். அரசு சார்பிலும், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கோவில்களில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தின் கான்பூர் மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தில் வித்தியாசமான முறையில் பெண்கள் மழை வேண்டி பூஜைகள் நடத்தினர். எருதுகள் ...
Read More »