ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயதுல்லா அலி கமேனி உட்பட முக்கிய தலைவர்களிற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தடைகளை விதித்துள்ளார்.
புதிய தடைகளை விதிக்கும் உத்தரவில் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளார். புதிய தடைகள் காரணமாக பில்லியன் டொலாகள் பெறுமதியான ஈரானின் சொத்துக்கள் முடக்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்கான பதில் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த தடை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஈரான் கடைப்பிடிக்கும் மோதல் போக்கிற்கு இறுதியில் கமேனியே காரணம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த தடைகள் ஈரானின் உயர் ஆன்மீகதலைவரும் அவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளவர்களும் அவரது அலுவலகமும் முக்கிய பொருளாதார வளங்ளை பெறுவதை பயன்படுத்துவதை தடுக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.