அவுஸ்திரேலியாவில் இருந்து தாயகம் நோக்கி சிறகடித்த சிட்டுக்குருவி !

அவுஸ்திரேலிய தம்பதி ஒருவருக்கு தத்துக் கொடுக்கப்பட்ட நிலானி எனும் பெண், பல வருடங்களின் பின்னர் சொந்த தாயை தேடி கண்டுபிடித்துள்ளார்.

34 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாயை தேடி இலங்கை வந்த மகள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

1984 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை நோக்கி சென்ற மகளே தற்போது இலங்கையில் தாயை தேடி வந்துள்ளார்.

வறுமையின் காரணமாக குழந்தை பிறந்த இரண்டு வாரத்தில் வெளிநாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுத்ததாக குறித்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்குவதற்கு கூட வழியில்லாமல் தான் தனது பிள்ளையைஅவுஸ்திரேலிய தம்பதிக்கு வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது என்னிடம் வந்துள்ள மகளை வெளிநாட்டு மீண்டும் அனுப்ப விருப்பில்லை. எனினும் அவர் அங்கு பணி புரிவதால் அதனை தடுக்க முடியவில்லை.

தற்போது நிலானி என்ற பெயரில் உள்ள குறித்த பெண் தனது பிள்ளைகளுடன் இலங்கையில் உள்ள தாயை பார்க்க வருகைத்தந்துள்ளார்.</p><p>தாய் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விரும்பியமையினால் தன்னிடம் இருந்த தகவல்களின் அடிப்படையில் தாயை தேடியதாக மகள் நிலானி குறிப்பிட்டுள்ளார்.

தான் தற்போது தனக்கு உயிர் கொடுத்த தாயை கண்டுபிடித்தமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.