செய்திமுரசு

ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு!

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை இழுத்தடிக்கின்ற ஒரு செயலாக நாங்கள் கருதுகின்றோம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். ஹட்டனில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக ...

Read More »

‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ – பிரதமர் ஜெசிந்தா

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார். நியூசிலாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஒயிட் தீவில் உள்ள எரிமலையில் நேற்று முன்தினம் வெடிப்பு ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் 47 பேர் சிக்கிக்கொண்டனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் எரிமலை வெடிப்பில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 34 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலருக்கு கடுமையான தீக்காயங்கள் இருப்பதால் அவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் ...

Read More »

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர். ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக ...

Read More »

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் – இன்றைய மைனஸ்!

குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அதை­யெல்லாம் காதில் போடாமல் கோத்­தா­பய ராஜ­பக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி அழகு பார்த்­தனர்  மக்கள். எதிர்­பார்த்­தது போலவே தான் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் அண்ணன் மஹிந்­தவை  பிர­த­ம­ராக்­கினார்  ஜனா­தி­பதி  கோத்­தா­பய. தனது மற்­று­மொரு அண்ணன் சமல் ராஜ­பக் ஷவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்­கினார். மக்­களின் மெளனம் தொடர்­கி­றது. தேர்தல் காலத்தில்  எதி­ர­ணி­யி­ட­மி­ருந்து ஒலித்த குடும்ப அர­சியல் கோஷங்­களை  இப்­போது காண­மு­டி­ய­வில்லை. தேர்தல் ...

Read More »

இலக்கின்றி தேர்தலில் போட்டியிடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன் கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் இது வரையில் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பெரும்பாலான வேட்பாளர்கள் செயற்பட்டதாக ஆணைக்குழு இனங்கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அடுத்த ...

Read More »

இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறுவது முற்றிலும் பொய்யானதாம்!

இலங்கை இராணுவம் பொதுமக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்கின்றது என சர்வதேச புலம்பெயர் அமைப்புகளும் இலங்கையில் சிலரும் முன்வைக்கும் காரணிகள் உண்மைக்கு புறம்பான முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய கருத்தாகும். அத்துடன் கடந்த ஆட்சிக் காலத்தில் இராணுவ அதிகாரிகளை சிறையில் அடைக்கப்பட்ட காரணிகள் கண்டிக்கத்தக்க காரணிகள் என்கிறார் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன. இஸ்லாமிய மதத்தின் பெயரில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் போன்றதொரு சம்பவம் இடம்பெற இராணுவம் இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினர். ஸ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையத்திற்கு பாதுகாப்பு செயலாளரான ஓய்வு ...

Read More »

மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ள சிட்னி மக்கள்!

அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது. இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் பகல் ...

Read More »

2,000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வரும் தமிழர் குலம்!

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சமூகம் இருப்பதாக தமிழர் பாரம்பரியத்தின் அதிகம் அறியப்படாத அம்சங்களை ஆராயும் புதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. உலகம் தோன்றி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. புற்களும் பூச்சியினங்களும் மட்டுமே முதலில் கிரகத்தில் இருந்தன. பரிணாம வளர்ச்சி அடைய அடைய குரங்கிலிருந்தே மனிதன் வந்தான் என அறிவியலாளர்கள் கூறிவருகின்றனர். ஆனால், கடவுள் மனிதரை படைத்தார், படைத்தவன் ஒருவன் உள்ளான் என்கின்றனர் மற்றொரு சார்பினர். மனித குலம் எங்கே, எவ்வாறு தோன்றியது? எவ்வாறு நாகரீகம் வளர்ந்தது? என்ற ...

Read More »

அபிவிருத்தி அரசியல்!

அதி­காரப் பகிர்வு, அர­சியல் தீர்வு என்ற வட்­டத்தில் இருந்து தமிழ்த்­த­ரப்பு வெளியில் வர­வேண்­டிய நிர்ப்­பந்தம் எழுந்­துள்­ளது. அர­சியல் தீர்வு காண்­பது அவ­சியம்; மிக மிக அவ­சியம். அந்த வகையில் அர­சியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் அர­சியல் தீர்வே முடிவானது  என்ற வட்­டத்தில் தமிழ்த் ­த­லை­மைகள் மூழ்கி இருந்­தன. இந்த அர­சியல் நம்­பிக்­கையை தமிழ்த்­ த­ரப்பு யுத்­தத்­திற்கு முன்­னரும் கொண்­டி­ருந்­தது. பின்­னரும் பற்­றி­யி­ருந்­தது. இறுக்­க­மாகப் பற்­றி­யி­ருந்­தது. இந்த நம்­பிக்கை மீதான பற்­று­தலே, இணக்க அர­சி­யலில் இருந்து விலகி, ...

Read More »

ஆஸ்திரேலியாவை எச்சரிக்கிறார் இயன் சேப்பல்!

எங்கள் மண்ணில் இரண்டு பகல்-இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுங்கள் என கோரிக்கை விடுத்துள்ள ஆஸ்திரேலியாவை எச்சரித்துள்ளார் இயன் சேப்பல். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு போட்டிகளில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட வேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், ஒரே தொடரில் இரண்டு போட்டிகள் என்பது கொஞ்சம் அதிகப்படியானது என்று தெரிவித்திருந்தார். ...

Read More »