ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் கடந்த மாதம் ஒரே சமயத்தில் 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது.
2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் தீயில் கருகி நாசமாகின. சுமார் 500 வீடுகள் காட்டுத்தீயினால் முற்றிலுமாக சேதமடைந்தன. இந்த காட்டுத்தீயில் 4 பேர் பலியாகினர்.
ஒரு மாதத்துக்கு மேலாகியும் தற்போதும் இந்த காட்டுத்தீ முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. சுமார் 50 இடங்களில் தொடர்ந்து எரிந்து வருகிறது.
இந்த நிலையில் காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் செத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. காட்டுத்தீ தொடர்பாக அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில் சூழலியல் நிபுணர் ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், “நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் எரியும் காட்டுத்தீ கோலா கரடிகளின் வாழ்விடங்களை ஏறத்தாழ முற்றிலுமாக அழித்துவிட்டது” என்றார்.
Eelamurasu Australia Online News Portal