அவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை மண்டலமாகவும் மாறியுள்ளது.
இதனால் சிட்டினியின் பிரபல அடையாளங்களும் மறைக்கப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ளனர். மேலும் சிறுவர்களும், வயோதிபர்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டிருந்த சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சிட்னி நகரில் காற்றின் தரம் இன்றைய தினம் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் பகல் பொழுதுகளில் வானம் செம்மஞ்சள் நிறமாக மாறியுள்ளதுடன், அப் பகுதியில் படகு, விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.