பொதுத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும் எவ்வித இலக்கும் இன்றி மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் போட்டியிடும் வேட்பாளர், கட்சிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அத்துடன் கட்டுப்பணத்தை அதிகரிப்பது தொடர்பில் இது வரையில் முடிவெதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மறைமுகமாக பிரிதொரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நோக்கில் பெரும்பாலான வேட்பாளர்கள் செயற்பட்டதாக ஆணைக்குழு இனங்கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்த நிலைவரம் தொடருமா என்பது தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal