எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாளை காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபறெவுள்ளது. மாலை ஐந்து மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்ததும் வாக்குச் சீட்டுக்கள் அடங்கிய வாக்குப் பெட்டிகள் அந்தந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்கு ...
Read More »செய்திமுரசு
ஜனாதிபதித் தேர்தல் – 2019 ; நடைபெறக்கூடியது என்ன ?
ஜனாதிபதித் தேர்தல் 2019 நவம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடைபெற்று ஓரிரு நாட்களில் புதிய ஜனாதிபதியும் தெரிவு செய்யப்பட்டுவிடுவார். யார் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என்ற ஏக்கத்திலும் ஊகத்திலும் மக்கள் உள்ளனர். அதற்கு காரணம் 35 அபேட்சகர்கள் போட்டியிடுவதல்ல வேறு காரணங்களாகும். எனினும் பெரும்பாலான மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் டம்மி அபேட்சகர்களும் அரசியலையே பொழுதுபோக்காக கொண்ட ஜோக்கர்களும் போட்டியிடுவதால் அவர்களில் யார் வெற்றி பெறுவர் என்பதை தீர்மானிப்பதில் சங்கடப்படாமல் நிச்சயமாக சஜித், கோத்தபாய, அநுர குமார திசாநாயக்க ஆகிய இவர்களில் ஒருவரே ...
Read More »அகதியின் உடலை திருப்பி அனுப்ப உதவ மறுக்கும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவில் தற்கொலை செய்து கொண்ட ஆப்கானிஸ்தான் அகதியின் உடலை ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது குடும்பத்திடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு 15,000 டாலர்களை கேட்டுள்ளது. சயத் மிர்வாஸ் ரோஹனி என்ற 32 வயது அகதி, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பத்தில் சிக்கல் நீடித்து வருகின்றது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மருத்துவராக பணியாற்றிய இவர், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் மனுஸ்தீவில் நான்கு ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் மனநல பாதிப்பை எதிர்கொண்ட நிலையில, மேலதிக சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு மாற்றப்பட்டிருந்தார். ...
Read More »பண்டைக்கால ஆயுதங்களை பயன்படுத்தி புதுவித தாக்குதல்!
அம்புகளும் வில்லுகளும் பண்டைய புராண கால மோதல்களின் போது பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் என்பது பலரதும் கருத்தாகவுள்ளது. ஆனால் ஹொங்கொங் நகரில் நேற்று புதன்கிழமை சீன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் குழுவினர் அந்தக் கருத்து தவறு என்பதை நிரூபிக்கும் வகையில் புதுவித தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். அவர்கள் தீப்பந்தமாக கொழுந்து விட்டு எரியச்செய்யப்பட்ட அம்புகளை வில்லுகள் மூலம் ஏவி அந்நகரிலிருந்த சீனப் பல்கலைக்கழகமொன்றின் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அருகி லிருந்த புகையிரதமொன்று தீப்பற்றி எரிந்துள்ளது. TAGS
Read More »ஆஸ்திரேலியா காட்டுத்தீ அணைக்கும் பணியில் கர்பிணிப்பெண்!
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் எரியும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சில் 13 வாரம் கர்ப்பமாக உள்ள தீயணைப்பாளர் ஒருவர் பணியாற்றுகிறார். 23 வயது ஆனா கேட் ராபின்சன்-வில்லியம்ஸ் எனும் தீயணைப்பாளர் ஆடையுடன் Instagramஇல் தம் படத்தைப் பதிவுசெய்திருந்தார். தம் நாட்டை நேசிப்பதாகவும், தீயை அணைக்க தமது நண்பர்கள் போராடி வரும்போது தாம் மட்டும் எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார். 13 வாரச் சிசுவின் sonogram படத்தையும் அவர் பதிவேற்றம் செய்தார். சரியான பாதுகாப்பு ஆடைகளை அணிந்து, மருத்துவரின் ஒப்புதலுடன் ...
Read More »தேர்தலிற்கு பின்னர் நிலைமை மோசமடையலாம் !- இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம்!
வோசிங்டன் போஸ்ட் தமிழில் ரஜீபன் இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். 2005 முதல் 2015 வரையான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம் தண்டிக்க தவறியுள்ளமை குறித்து ...
Read More »ஆயிரம் நாள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ள ஐ.நா.பிரதிநிதிகள்!
வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும் தமது ஆயிரம் நாள் போராட்டத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தமது போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவை வழங்குமாறு கோருவதாகவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர். ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி மறைந்திருப்பதாக சம்பந்தன் பொய் சொல்லும்போது ...
Read More »ஜனாதிபதி தேர்தலின் முதலாவது முடிவு!
நாட்டின் 8 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொருட்டு, எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முதல் முடிவை பெரும்பாலும் அன்றைய தினம்(16.11.2019) நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் நேற்று மாலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு தலைவர் தேர்தல் முடிவுகளில் தபால் மூல வாக்குகள் தொடர்பான பெறுபேறுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு வெளியிடக்கூடியதாக இருக்கும் ...
Read More »ஆஸ்திரேலியாவில் 12க்கும் அதிகமான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன!
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக பயங்கரமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காட்டுத் தீயை அணைக்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். காட்டுத் தீ காரணமாக இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 30க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். சுமார் 150க்கும் அதிகமான வீடுகள் காட்டுத் தீயால் நாசமாகியுள்ளன. தொடர்ந்து காட்டுத் தீ ஏற்பட்ட இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. காட்டுத் தீ காரணமாக நியூ ...
Read More »கோத்தாபயவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்!
கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்தத் திட்டங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாகக் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்றுக்காட்டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அதிகம் விமர்சிக்கப்படும் வெள்ளை வேன் ...
Read More »