வவுனியாவில் 997ஆவது நாட்களைக் கடந்து போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஆயிரம் நாள் போராட்டம் நாளை வெள்ளிக் கிழமை இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், தமது போராட்டத்தைப் பார்வையிடவுள்ளதாக தெரிவித்திருப்பதாகவும் சில சர்வதேச ஊடகவியலாளர்களும் தமது ஆயிரம் நாள் போராட்டத்துக்கு வருகை தரவுள்ளதாகவும் தமது போராட்டத்துக்கு பொது மக்கள் ஆதரவை வழங்குமாறு கோருவதாகவும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேற்று முன்தினம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஒற்றையாட்சி அரசுக்குள் சமஷ்டி மறைந்திருப்பதாக சம்பந்தன் பொய் சொல்லும்போது தமிழ் புத்திஜீவிகள் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் எங்கே?
கடந்த 10 ஆண்டுகளாக எங்களை ஏமாற்றிய பிறகு தமிழர்கள் ஏன் மீண்டும் மீண்டும் உங்கள் பேச்சைக்கேட்க வேண்டும்? இனி சிங்கள ஜனாதிபதி வேட்பாளரை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய். எங்கே எங்கே எங்கள் உறவுகள் எங்கே? போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் ஐக்கிய நாடுகள் கொடியுடன் தமது போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.