வோசிங்டன் போஸ்ட்
தமிழில் ரஜீபன்
இலங்கையின் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் செயற்பட்ட கொலைகும்பல்களிடமிருந்து தப்புவற்காக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டு நாடு கடந்த நிலையில்வாழும் இலங்கைபத்திரிகையாளர்கள், தங்;கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழிநடத்தியவர் இவ்வாரம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால் ,தாங்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பமுடியாது எனவும் தங்களிற்கு நீதி கிடைக்காது எனவும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
2005 முதல் 2015 வரையான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஊடகஉறுப்பினர்களிற்கு எதிராக தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை தற்போதைய அரசாங்கம் தண்டிக்க தவறியுள்ளமை குறித்து புலம்பெயர்ந்து வாழும் ஊடகவியலாளர்கள் ஏமாற்றமும் கவலையும் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்சவின் சகோதரரும், ஊடகவியலாளர்கள்மீதான தாக்குதலிற்கு காரணம் என சந்தேகிக்கப்படுபவரும்- முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ச சனிக்கிழமை இடம்பெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவார் என கருதப்படும் நிலையில் – நிலைமை தங்களிற்கு சாதகமானதாக தற்போதைக்கு மாறாது என நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2015 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய அரசாங்கம் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபடுபவர்களிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை முடிவிற்கு கொண்டுவருவதாக உறுதியளித்தது.
ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களிற்காக இதுவரை எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதில் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எங்களிற்கு திருப்தியளிக்கவில்லை என்கின்றார், இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத்.
ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் எவரும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை நீதியின்முன்நிறுத்தப்படவில்லை என்கிறார் அவர்.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாத கொலையாளிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.ஏனையவர்கள் மர்மவான்களில் கடத்தப்பட்டுசித்திரவதை செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.
இலங்கையின் உள்நாட்டுயுத்தத்தின் இறுதி தருணங்களிலேயே இந்த சம்பவங்;கள் இடம்பெற்றன.
எத்தனை பேர் கடத்தப்பட்டனர் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான புள்ளிவிபரங்கள் இல்லாத அதேவேளை 60ற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உயிர் அச்சம் காரணமாக நாட்டிலிருந்து வெளியேறினர் என்கி;ன்றார் சம்பத்.
பத்திரிகையாளர்களும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களும் வெள்ளை வானி;ல் கடத்தப்பட்டமை,மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஒடுக்குமுறைகளிற்கான குறியீடாக விளங்குகின்றது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிர்தப்பிய ஒரு சில பத்திரிகையாளர்களில் போத்தல ஜயந்தவும் ஒருவர் . 2009 யூன் மாதம் முதலாம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்ட அவர் ஈவிரக்கமற்ற முறையில் சித்திரவதை செய்யப்பட்டார்.
அவரது கால்கள் நசுக்கப்பட்டன, விரல்கள் சேதமாக்கப்பட்டன அதன் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.
அவர் அதன் பின்னர் ஒரு மாதகாலத்திற்கு மேல் மருத்துவமனையில்உயிருக்காக போராடினார்.மருத்துவமனையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னரும் அவர் பல மாதங்களாக நடமாட முடியாத நிலையில் காணப்பட்டார்.
போத்தல ஜயந்த அக்காலப்பகுதியில் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவராகயிருந்தார்,ஊடகங்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து பகிரங்கமாக கருத்து வெளியிட்ட அவர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது ஆபத்தான விடயம் என கருதப்பட்ட காலங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தார்.
தான்தாக்கப்பட்டு ஆறு மாதங்களிற்கு பின்னர்- தனது உயிருக்கு ஆபத்து அதிகரித்த நிலையில் அவர் தனது மனைவிமகளுடன் நியுயோர்க்கிற்கு தப்பிச்சென்றார்.
போத்தல ஜயந்த தன் மீதான தாக்குதலிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது குறித்து ஏமாற்றம் வெளியிட்டார்.
என் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் இதுவரை எந்தவித குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறையினர் சிலரிடமிருந்து வாக்குமூலங்களை மாத்திரம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் அவர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் முடிவிற்கு வரலாம் என போத்தல ஜெயந்த தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்த அனைத்து விசாரணைகளும் முடிவிற்கு வந்துவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் யூன் மாதத்தில் மீண்டும் இலங்கை திரும்பி மீண்டும் பத்திரிகை தொழில் ஈடுபட எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ராஜபக்ச அதிகாரத்திற்கு வந்தால் என்னால் இலங்கைக்கு மீண்டும் செல்ல முடியும் என நான் கருதவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது குடும்பத்தவர்கள் நான் இலங்கை செல்ல அனுமதிக்கமாட்டார்கள்,அப்படி வந்தால் கூட என்னால் பத்திரிகையாளனாக பணியாற்ற முடியும் என நான்கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் என்னை தாக்கியவர்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையில் என்னால் பத்திரிகை தொழில் ஈடுபடமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர் என கருதப்படும் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை முடித்து வைத்தமைக்காக அந்த நாட்டின் பெரும்பான்மை சமூகத்தினரால் கதாநாயகனாக கருதப்படுகின்றார்.
இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் ஹோட்டல்களிலும் இடம்பெற்ற உயிர்த்தஞாயிறுகுண்டுதாக்குதல்கள் அவரது செல்வாக்கை அதிகரித்துள்ளன.
பலர் நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமைவழங்க கூடிய தலைவரை எதிர்பார்க்கின்றனர்.
கோத்தாபய ராஜபக்சவின் அலுவலகத்திடம் நாங்கள் கருத்து கேட்டவேளை அவர்கள் பதில் அளிக்கவில்லை.
ஆனால் அவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
எல்லாவிதமான குற்றச்சாட்டுகளையும் மேற்கொள்ளலாம் ஆனால் அதற்கு ஆதாரம் வேண்டுமென கோத்தாபயவின்பேச்சாளர் சரத் அமுனுகம சமீபத்தில் தெரிவித்தார்.
கோத்தபாய ராஜபக்ச தனது முதல் பிரச்சார கூட்டத்தில் தான் அதிகாரத்திற்கு வந்த மறுநாள் சிறையில் உள்ள அனை;த்து படையினரையும் விடுதலைசெய்வேன் எனதெரிவித்திருப்பது குறித்து சம்பத் கவலை வெளியிடுகின்றார்.
விசாரணையின்றி அவர்களை விடுதலை செய்வது சட்டத்தின் ஆட்சியை முடிவிற்கு கொண்டுவரும் நிலைமை இன்னமும் மோசமடையும் என்கின்றார் அவர்.
ராஜபக்ச ஜனாதிபதியாகலாம் என்பது குறித்து நாடுகடந்துவாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் அச்சம் கொண்டுள்ளனர் என்கிறார் பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஆசியாவிற்கான ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர்.
2009 முதல் பாரிசில் வாழும் இலங்கைபத்திரிகையாளரான அத்துல விதானகேயும் தற்போதைய அரசாங்கத்தின் தோல்வியை விமர்சிக்கின்றார்.
2015 ற்கு பின்னர் நான் இலங்கை;கு வர திட்டமிட்டிருந்தேன் ஆனால் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தோ அவர்கள் மீதான தாக்குதல்களை விசாரணை செய்வது குறித்தோ குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாததால் இலங்கை திரும்பும் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடுகடந்து வாழும் பத்திரிகையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்ப முடியாது என்கிறார்.
அவர் பதவிக்கு வந்தால் நாங்கள் இலங்கைக்கு திரும்பும் எங்கள் நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டுவிடும் என்கிறார் அவர்.