செய்திமுரசு

பத்திரிகையாளர் கசோகி கொலை : ஐந்து பேருக்கு மரணதண்டனை தீர்ப்பு!

பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையுடன் தொடர்புடைய ஐந்து பேருக்கு சவூதி அரேபியா நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி துருக்கியின்  இஸ்தான்புல் நகரில் உள்ள சவூதிஅரேபிய தூதரகத்திற்கு சென்ற அவர் மர்மமாக கொலை  செய்யப்பட்டார். சவூதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி  துருக்கியில் உள்ள தூதரகத்திற்குள் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட நிலையில் அதற்கான பல ஆதாரங்கள் சிக்கின. அந்நாட்டு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் 11 பேர் கைது ...

Read More »

இனப்­பி­ரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான வரலாற்றுக் கடமை பிரிட்­ட­னுக்கு உண்டு!

ஐக்­கிய இலங்­கைக்குள் சமஷ்டிக் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் மனித உரி­மைகள் நிலை­நாட்­டப்­ப­டு­கின்­ற­மையை உறு­திப்­ப­டுத்தி, தமி ழர்­களின் பாது­காப்­பையும் நல­னையும் பேணு­வ­தற்கு இன்னும் காலம் பிந்­தி­வி­ட­வில்லை என்று பிரிட்­டனின் பொதுத் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய பிர­தமர் பொரிஸ் ஜோன்­ச­னுக்கு  அனுப்பி வைத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் வடக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் தமிழ் மக்கள் கட்­சியின் ஸ்தாப­கரும், செய­லாளர் நாய­க­மு­க­மான நீதி­ய­சரர் சி.வீ.விக்­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார். கொன்சர் வேட்டிவ் கட்­சியைச் சோந்த பிர­தமர் பொறிஸ் ஜோன்ச னின் தேர்தல் வெற்­றியை ஒட்டி அவ­ருக்கு அனுப்­பிய வாழ்த்துக் கடி­தத்தில் விக்­னேஸ்­வரன் மேலும் ...

Read More »

கடந்த அரசாங்கத்தின் வீண் செலவுகளுக்கான ஆதாரங்கள்……!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த அரசாங்கத்தின் நிதி  நிலைமை மற்றும் அரசாங்கத்தின் வீண் செலவுகள் தொடர்பான  ஆதாரங்களை ஜனவரி மாதம் நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவார் என்று தகவல் மற்றும் தொடர்பாடல், உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது : அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெற வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் ...

Read More »

ஆஸ்திரேலிய ஹோட்டலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள்!

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சுமார் 40 அகதிகளுக்கு முறையான சிகிச்சை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்  33வயது குர்து அகதி மோஸ். மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் அழைத்து செல்லப்பட்ட சுமார் 40 அகதிகளும், பல மாதங்களாக மெல்பேர்னில் உள்ள ஒரு ஹோட்டலிலேயே வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மனுஸ்தீவில் சுமார் 7 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 40 நாட்களுக்கு முன்பு ஆஸ்மா சிகிச்சைக்காக தன்னை ஆஸ்திரேலியா கொண்டு வந்ததாகக் கூறுகிறார் அகதி மோஸ். “வந்ததிலிருந்து எனக்கு ...

Read More »

வைராக்கிய அரசியல் நன்மை பயக்காது!

தெற்காசியப் பிராந்­தி­யத்தில் ஜன­நா­யகம் நில­வு­கின்ற நாடு­களில் ஒன்­றாக இலங்கை கணிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜன­நா­யக ஆட்சி நில­வு­கின்­றது. பல்­லின மக்­களும் பல மதங்­களைப் பின்­பற்­று­வோரும் இங்கு ஐக்­கி­ய­மாக வாழ்­கின்­றார்கள் என்ற பொது­வா­னதோர் அர­சியல் பார்­வையும் உண்டு. இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கோரி முப்­பது வரு­டங்­க­ளாக ஆயுதப் போராட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த பின்­ன­ணியில் இந்த ஜன­நா­யகக் கணிப்பு நில­வி­யது என்­பது கவ­னத்­துக்குரி­யது. உண்­மையில் இங்கு ஜன­நா­யகம் நில­வு­கின்­றதா என்­பது விமர்­சனப் பண்­பு­களைக் கொண்ட முக்­கி­ய­மான கேள்­வி­. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­காக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆயுதப் போராட்டம் நாட்டின் ஜன­நா­ய­கத்­துக்குக் ...

Read More »

அமெரிக்க அறிவியல் அறக்கட்டளை இயக்குநராக தமிழர் தேர்வு!

அமெரிக்காவின் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் (என்.எஸ்.எப்.) இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த சேதுராமன் பஞ்சநாதன் (58) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற அறிவியல் அமைப்பாக ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ விளங்குகிறது. அந்நாட்டில் மருத்துவம் சாராத அறிவியல் மற்றும்பொறியியல் துறைகளில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளுக்கு இந்த அறக்கட்டளை கணிசமான உதவிகளை செய்து வருகிறது. இதுதவிர, அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களிலும் இந்த அறக்கட்டளை முக்கியப் பங்காற்றி வருகிறது. இதனிடையே, இதன் இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த பிரான்ஸ் கார்டோவாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ளது. ...

Read More »

சம்­பந்­தனும் சுமந்­தி­ரனும் நீங்கினால் கூட்டமைப்பு பிழைத்­துக்­கொள்ளும்!

தமிழ் ஈழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழீழ மக்கள்  விடு­தலைக் கழகத் (புளொட்) தலைவர் த.சித்­தார்த்­தன்­ ஆ­கியோர் தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை விட்டு வெளி­யேறமாட்­டார்கள் என்­பதே எனது கணிப்பு. அவர்­க­ளுக்கு வேண்­டி­யது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவி. எங்கு சென்றால் அது கிடைக்கும் என்றே அவர்கள் பார்ப்­பார்கள். எவ்­வாறு நடந்­து­கொண்டால் தமது இலக்கை அடைய முடியும் என்று அதற்­கேற்­ற­வாறு நடிப்­பார்கள். கொள்­கைகள் பற்றி அவர்கள் எவ­ருமே அலட்­டிக்­கொள்­வ­தில்லை என, தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர் நாயகம் சி..வி. விக்கி­னேஸ்­வரன்   அளித்த பிரத்­தி­யேக நேர்­கா­ண­லி­லேயே மேற்­கண்­ட­வாறு ...

Read More »

சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம்; உள்நாட்டு சட்டத்துக்கமையவே நடவடிக்கை!

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கானியா கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணையை இந்த நாட்டில் உள்ள சட்ட விதிகளுக்கு அமைவாகவே முன்னெடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கண்டறிவதற்காக இலங்கையின் முன்னாள் சுவிட்சர்லாந்து தூதுவர் ஜோக் பெடரன் எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு வரவுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றுகையில் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ...

Read More »

பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினரை ஈடுபடுத்தும் வகையில் அதிவிசேட வர்த்தமானி!

பொதுமக்கள் மத்தியில் அமைதியை தொடர்ந்து பேணுவதற்காக ஆயும் தரித்த படையினர் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவை தொடர்ந்து நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது. ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் நீக்கப்பட்டதையடுத்து,  பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய நாடு முழுவதிலும் உள்ள நிர்வாக மாவட்டங்களை ...

Read More »

நியூஸிலாந்தில் 50 ஆயிரத்துக் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல்!

நியூஸிலாந்தில் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தனி நபர் ஒருவர் மேற்கொண்ட கோ துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் நியூஸிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஆயுத தடை சட்டத்தின்மூலம் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளும் பொலிஸாரும் ...

Read More »