நியூஸிலாந்தில் இடம்பெற்ற கிறிஸ்ட்சர்ச் தாக்குதலை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளதாக நியூஸிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தனி நபர் ஒருவர் மேற்கொண்ட கோ துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் வரை உயிரிழந்தனர்.
அதன் பின்னர் நியூஸிலாந்தில் கொண்டுவரப்பட்ட ஆயுத தடை சட்டத்தின்மூலம் பொது மக்கள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினரிடமிருந்து துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அந்நாட்டு அதிகாரிகளும் பொலிஸாரும் ஆரம்பித்திருந்தனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வரையான காலப் பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Eelamurasu Australia Online News Portal