செய்திமுரசு

புதிய கட்சியை பதிவு செய்ய வேண்டாம் என எழுத்துமூலம் கோரிக்கை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இணையான பொருள்படும் அல்லது பெயருடன் கூடிய புதிய கட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என இந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேர்தலை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை நேரில் சந்தித்து எழுத்து மூலம் ...

Read More »

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் பொதுநலவாய விளையாட்டு

2017ம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை அம்பாந்தோட்டையில் நடத்துவதற்காக 2011ம் ஆண்டு இடம்பெற்ற வாக்கெடுப்பிற்கான ஆரம்ப நடவடிக்கைகளில் பாரிய நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது அரச பணம் மற்றும் நன்கொடையாளர்களின் 680 மில்லியன் ரூபாய் பணம் இலங்கை வங்கியின் கொழும்பு பெரு நிறுவன கிளையின் 71199250 என்ற இலக்கத்தில் பொதுநலவாய விளையாட்டு என்ற பெயருடனான கணக்கில் வைப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும் தற்போது அந்த கணக்கில் 246 மில்லியன் ரூபாய் மாத்திரமே மீதமாக உள்ளதென ...

Read More »

அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்தவர் பணிநீக்கம்

அவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிட்னி நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த மேலாளருக்கு அலுவலகம் பிரத்யோகமான மடிக்கணிணி ஒன்று வழங்கியிருந்தது. இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபோது அந்த மடிக்கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததும், ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது. அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக நிறுவனம் அவரை கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக ...

Read More »

முதலமைச்சரின் வருகைக்காக காத்திருக்கும் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள்!

பிரித்தானியாவின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாண நகரத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க ஒரு இரட்டை நகர உடன்படிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி செய்துகொள்ளவிருக்கிறது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஆட்சி, சுகாதரம், கல்வி மற்றும் தொழில் துறைகளில் அறிவுப்பரிமாற்றம் மற்றும் புரிந்துணர்வு ஆகியவற்றை இரு நகரங்களுக்கும் மேம்படுத்துவதற்கு வழி ஏற்பட்டுள்ளது. கடந்த பல மாதங்களாக இதுதொடர்பில் வட மாகாண சபை முதலமைச்சர் எடுத்துவந்த முயற்சி தற்போது கைகூடி உள்ளது. இதுதொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கிங்ஸ்ரன் கவுன்சிலின் ...

Read More »

அவுஸ்ரேலியாவில் 5 மாத குழந்தையை கொன்ற தாய்: 8 வருடம் சிறை

அவுஸ்ரேலியா நாட்டில் குடிபோதையில் 5 மாத மகனை கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் மெலிசா என்ற 27 வயதான தாயார் ஒருவர் தனது 5 மாத மகனுடன் வசித்து வந்துள்ளார். மெலிசாவிற்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் நாள் மெலிசா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மருந்தையை எடுத்துள்ளார். பின்னர், சிகரெட் பற்ற ...

Read More »

அவுஸ்ரேலியாவில் ஆபத்தான பொருட்கள்

அவுஸ்ரேலியாவில் விற்பனையாகும் பொருட்கள் மற்றும் இங்குள்ள நிறுவனங்களில் மோசமானவை எவை என்பதற்கான இவ்வருட Choice Shonky Awards அறிவிக்கப்பட்டுள்ளன. Choice நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் மோசமான பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான Shonky விருதுகளை அறிவிப்பது வழக்கம். அந்த வகைகயில் மக்களை ஏமாற்றும் வகையிலான விளம்பரங்கள், ஆபத்தை உண்டாக்கக்கூடிய பொருட்கள் மற்றும் அந்தப் பொருள்/சேவை குறித்த பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களிடம் பணம் பறித்தல்  ஆகிய பிரிவுகளின் கீழ் இந்தவருட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக Choice நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதில் Samsung, Amex உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்குகின்றமை ...

Read More »

வெள்ளை வான் கடத்தல்- கரன்னாகொடவிடம் விசாரணை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட இன்றைய தினமும் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார். தெஹிவளை மற்றும் கொட்டாஞ்சேனை பகுதிகளில் வைத்து கடந்த 2008 ஆம் ஆண்டு மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழ், முஸ்லீம் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இதுகுறித்த மேலதிக விசாரணைகளுக்காக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ...

Read More »

அவுஸ்ரேலியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

அவுஸ்ரேலியாவிற்கு ஏதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்றது. டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் அஸ்ரேலியா அணி 371 ரன்கள் குவித்தனர். அந்த அணியில் டேவிட் வார்னர்(117), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சதம் அடித்து அசத்தினர். பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ...

Read More »

அவுஸ்ரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடர் – காயம் காரணமாக பர்னெல் நீக்கம்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெலுக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் ...

Read More »

அகதிகளை நாடு கடத்துவது குறித்து சுவிஸ் – சிறிலங்கா உடன்பாடு கைச்சாத்து

அகதிகளை நாடு கடத்துவது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் நேற்று இருதரப்பு உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு நேற்று கையெழுத்திடப்பட்டது .நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பான இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது. தாயகம் திருப்பி அனுப்பப்படும் இலங்கையர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டை சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார். முன்பு போலவே, இந்த உடன்பாட்டுக்கு அமையவும், ஒவ்வொருவரும் பரிசீலிக்கப்படுவார்கள்- யாருக்கு உதவி தேவை, யாருக்கு அடைக்கலம் அளிக்க வேண்டும், ...

Read More »