அவுஸ்ரேலியாக்கு எதிரான ஒருநாள் தொடர் – காயம் காரணமாக பர்னெல் நீக்கம்

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெல் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.

தென்ஆப்பிரிக்கா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-வது போட்டியின்போது தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் வெயின் பர்னெலுக்கு காயம் ஏற்பட்டது. விலா எலும்பில் ஏற்பட்ட காயத்திற்காக அவர் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆகையால், இன்றைய போட்டி மற்றும் கடைசி இரண்டு போட்டிகளிலும் இருந்து பர்னெல் நீக்கப்பட்டுள்ளார்.