அவுஸ்ரேலியாவில் 5 மாத குழந்தையை கொன்ற தாய்: 8 வருடம் சிறை

அவுஸ்ரேலியா நாட்டில் குடிபோதையில் 5 மாத மகனை கொன்ற தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் மெலிசா என்ற 27 வயதான தாயார் ஒருவர் தனது 5 மாத மகனுடன் வசித்து வந்துள்ளார்.

மெலிசாவிற்கு மது அருந்துதல் மற்றும் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஓர் நாள் மெலிசா அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு போதை மருந்தையை எடுத்துள்ளார்.

பின்னர், சிகரெட் பற்ற வைத்த மெலிசா அதில் இருந்து வெளியேறும் புகையை தனது குழந்தையின் முகத்தில் ஊதியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், குடிபோதையில் குழந்தை தரையில் அடித்தும் கைகளில் காயங்களும் ஏற்படுத்தியுள்ளார்.

குழந்தையின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அதன் மூளை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் அம்பலமானதை தொடர்ந்து மெலிசா உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு  வந்துள்ளது. அப்போது, ‘குடிபோதையில் என்ன செய்கிறேன் என தெரியாமல் பெற்ற மகனை கொன்று விட்டேன். ஒரு தாயாக இருக்க நான் தகுதி இல்லாதவள். நான் செய்த குற்றத்திற்காக மிகவும் வருந்துகிறேன்’ என நீதிபதி முன்னிலையில் கண்ணீர் விட்டுள்ளார்.

குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மெலிசாவுக்கு நீதிபதி 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.