அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்தவர் பணிநீக்கம்

அவுஸ்திரேலியா நாட்டில் அலுவலகம் ஒன்றில் ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியருக்கு ரூ 14 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிட்னி நகரில் பெயர் வெளியிடப்படாத நபர் ஒருவர் தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த மேலாளருக்கு அலுவலகம் பிரத்யோகமான மடிக்கணிணி ஒன்று வழங்கியிருந்தது.

இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபோது அந்த மடிக்கணிணியில் ஆபாசப்படம் பார்த்ததும், ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்ததும் தெரியவந்தது.

அலுவலகத்தில் விதிமுறைகளை மீறி ஆபாசப்படம் பார்த்த குற்றத்திற்காக நிறுவனம் அவரை கடந்த ஜனவரி மாதம் அதிரடியாக பணியில் இருந்து நீக்கியது.

எனினும், இது நியாயமற்ற நடவடிக்கை எனக் கண்டித்த மேலாளர் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று முன்தினம் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அப்போது, அலுவலக நேரத்தில் ஆபாசப்படங்களை பார்க்கவில்லை என்றும், மதிய உணவு நேரத்தில் மட்டும் தான் ஆபாசப்படங்களை பார்த்தேன்.

ஓய்வு நேரத்திலும் அலுவலகத்தில் ஆபாசப்படங்களை பார்க்க கூடாது என விதிமுறைகளில் இல்லை என மேலாளர் வாதிட்டுள்ளார்.

மேலாளரின் வாதத்தை எடுத்துக்கொண்டு நீதிபதி, ‘அலுவலக பணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஓய்வு நேரத்தில் மட்டுமே அவர் ஆபாசப்படங்களை பார்த்துள்ளதால், அது விதிமுறைகளை மீறிய செயல் அல்ல.

எனவே, ஊழியரை பணியில் இருந்து நீக்கிய காப்பீடு நிறுவனம் அவருக்கு 10,000 டொலர் (14,68,750 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.