ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இணையான பொருள்படும் அல்லது பெயருடன் கூடிய புதிய கட்சிகளை பதிவு செய்ய வேண்டாம் என இந்த கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் தேர்தலை ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை நேரில் சந்தித்து எழுத்து மூலம் இவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal