செய்திமுரசு

அவுஸ்ரேலியாவின் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் ரூ.1.50 கோடி மதிப்பில் செய்து வரும் நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்தை மையமாக கொண்ட அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்க உரிமைகளை எடுத்துள்ளனர். சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்த அமெரிக்காவை சேர்ந்த சாண்ட்லர் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குழுவினருக்கு நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி ...

Read More »

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் சாதனை பெண்மணி மரணம்

எவரெஸ்ட் மலையின் சிகரத்தை அடைந்த முதல் சாதனை பெண்மணியான ஜப்பானின் ஜூன்கோ தாபெய், தன்னுடைய 77-வது வயதில் இறந்துள்ளார். புற்றுநோயால் அவதியுற்ற அவர் வியாழக்கிழமை இறந்ததாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். எட்மன்ட் ஹிலரியும், டென்சிங் நோர்கேயும் உலகிலேயே மிகவும் உயரமான மலை சிகரத்தை சென்றடைந்த முதல் ஆண்கள் என்ற சாதனை பதிவுக்கு 22 ஆண்டுகளுக்கு பிறகு, 1975 ஆம் ஆண்டு ஜூன்கோ தாபெய் எவரஸ்ட் சிகரத்தை அடைந்தார். அவர் ஏறிய பிற முக்கிய மலை சிகரங்களில், ஆப்ரிக்காவிலுள்ள கிளிமாஞ்சாரோவும், அண்டார்டிகாவிலுள்ள வின்சன் மஸ்சிஃப்பும் அடங்குகின்றன. ...

Read More »

காட்டூனிஸ் அஸ்வினின் பூதவுடல் மாதகலில் நல்லடக்கம்

கடந்த 22ஆம் திகதி உக்கிரைன் நாட்டில் அகால மரணமடைந்த ஊடகவியலாளர் பற்றிக் அல்பேட் அஸ்வின் சுதர்சனின் பூதவுடல் நேற்று(22) அவரது சொந்த ஊரான மாதகலுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. நேற்று(22) மாலை 4.00 மணியளவில் மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பூதவுடல் புனித செபஸ்ரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், ஊடகவியலாளர்க என பலர் இறுதிவணக்கம் செலுத்தினர்.

Read More »

தமிழ் கட்டளைக்கு மட்டும் கட்டுப்படும் அரியவகை வெள்ளைப் புலி

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வனவிலங்கு காப்பகத்தின் புதிய வரவாக சேர்ந்துள்ள ஒரு அரியவகை வெள்ளைப் புலி தமிழில் அளிக்கப்படும் கட்டளைகளை மட்டுமே ஏற்றுக் கொள்வதால் தமிழ்மொழி தெரியாத வனவிலங்கு காப்பக பணியாளர்கள் திணறி வருகின்றனர். சென்னை வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் அரியவகை வெள்ளைப் புலிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு புலியை தங்களுக்கு அளிக்குமாறு ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் உள்ள வனவிலங்கு காப்பக அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலாக இரு ஓநாய்களை அளிக்கவும் அவர்கள் சம்மதித்தனர். இதையடுத்து, ‘ராமா’ என ...

Read More »

ஊடகவியலாளர் அஸ்வினின் இறுதி அஞ்சலி

கடந்த மாதம் 22ம் திகதி உக்கிரன்  நாட்டில் அஸ்வின் உயிரிழந்து இருந்தார். அவரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சனிக்கிழமை மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. ஈழத்தை சேர்ந்த இளம் பத்திரிகையாளரும் காட்டூனிஸ்டுமான அஸ்வின் சுதர்சன் மேற்கு நாடு ஒன்றில் புகலிடம் அடையச் சென்ற வேளையிலேயே ஒவ்வாமை காரணமாக  திடீர் மரணத்திற்கு உள்ளாகினார். யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாக் கொண்ட அஸ்வின் சுதர்சனம், சுடரொளி, வீரகேசரி, தினக்குரல் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தினக்குரல் பத்திரிகையில் காட்டூனிஸ்டாக பணிபுரிந்து தன்னுடைய கேலிச்சித்திரங்கள் மூலம் பலரது ...

Read More »

அவுஸ்ரேலியாவின் நெருக்கடியான அட்டவணை

அவுஸ்ரேலியா அணி சொந்த மண்ணில் இலங்கை அணிக்கெதிராக பிப்ரவரி 22-ந்தேதி டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறது. அதற்கு அடுத்த நாள் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் முக்கியமான அணி. அந்த அணி சில நேரங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணையைத் தயாரிக்கும். பொதுவாக இரண்டு தொடருக்கிடையில் சில நாட்களாவது இடைவெளி இருக்கும். ஆனால், அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் நடைபெற இருக்கும் தொடருக்கிடையில் ஒருநாள் மட்டுமே இடைவெளி உள்ளதுபோல் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை-அவுஸ்ரேலியா அணிகளுக்கு ...

Read More »

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கான புதிய தடுப்பு நிலையம்

பப்புவா நியூகினியில் புகலிடக்கோரிக்கையாளர்களைத் தங்க வைப்பதற்கான புதிய தடுப்பு நிலையத்தின் கட்டுமானப்பணிகள் விரைவில் ஆரம்பமாகுமென அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களைத் தங்க வைப்பதற்கே இந்த நிலையம் கட்டப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. பப்புவா நியூகினியின் ஒரேயொரு விமானநிலையத்திற்கு அருகில் இந்த நிலையம் அமைக்கப்படுகின்றது. இப்படியான தடுப்பு நிலையம் ஒன்று கட்டப்படுவதற்கான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு வெளியிடப்பட்டிருந்த நிலையில் இதற்கென 20மில்லியன் டொலர்களை ஆஸ்திரேலியா வழங்கவுள்ளது. இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி நீதிமன்றம் மனுஸ் ...

Read More »

விக்டோரியா மாநில புலமைப் பரிசில்

விக்டோரியா மாநில அரசு RMIT பல்கலைக்கழகத்தினூடாக வழங்கவுள்ள புலமைப் பரிசில் குறித்த தகவல் இது. நீங்கள் தமிழ் மொழிபெயர்த்துரைப்பாளராக(Interpreter) பணிபுரிகிறீர்களா? அல்லது அதற்கான டிப்ளோமா பயிற்சி நெறியை மேற்கொள்கிறீர்களா? விக்டோரியா மாநில அரசு மொழிபெயர்த்துரைப்பாளர்களுக்கான புலமைப்பரிசிலை வழங்குகிறது. இப்புலமைப் பரிசில் குறித்த மேலதிக விபரங்களை http://multicultural.vic.gov.au/projects-and-initiatives/improving-language-services/interpreter-scholarships என்ற இணைப்பில் பெற்றுக்கொள்ளலாம்.

Read More »

இந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்கள்-29ம் ஆண்டு நினைவு நாள்

அமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, யாழ் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிகழ்ந்த படுகொலை. இந்தியப்படையின் துப்பாக்கிச் சூட்டில், வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தியொரு பணியாளர்களும், நோயாளார் விடுதிகளில் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தியேழு நோயாளர்களுமாக, மொத்தம் அறுபத்தியெட்டுப் பேர் கொல்லப்பட்டார்கள். 1987 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் நாள் நடாத்தப்பட்ட அந்தக் கோரப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ...

Read More »

நீங்கள் தான் இவனுக்கு எல்லாம்- கண்ணீரில் கலங்கிய தாய்

அவுஸ்திரேலியாவில் தன் மகனின் நிலைமையை சக மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாய் ஒருவர் கண்ணீருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் கண்கலங்க வைத்ததுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தைச் சேர்ந்தவர் Sonia Buckley. இவருக்கு புல்லி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவர் கற்றல் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறு(ADHD, ODD) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எளிதில் அனைவரிடமும் கோபப்படக்கூடிய தன்மை கொண்டவர். இதனால் சக பள்ளி மாணவர்களும் இவருடன் வந்து பழகுவதற்கு சற்று அஞ்சுவர். இது போன்ற சூழ்நிலையில் ...

Read More »