அவுஸ்ரேலியாவின் அதானி நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி

அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் ரூ.1.50 கோடி மதிப்பில் செய்து வரும் நிலக்கரி சுரங்க பணிகளை நிறுத்த அமெரிக்க நிறுவனம் நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தை மையமாக கொண்ட அதானி குழுமத்தினர் அவுஸ்ரேலியாவில் நிலக்கரி சுரங்க உரிமைகளை எடுத்துள்ளனர்.

சுமார் ரூ. 1.50 லட்சம் கோடி மதிப்பில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை நிறுத்த அமெரிக்காவை சேர்ந்த சாண்ட்லர் பவுண்டேசன் நிறுவனம் சார்பில் ஆஸ்திரேலியாவில் உள்ள சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குழுவினருக்கு நிதியுதவி செய்வதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தகவலை த அவுஸ்ரேலியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில் அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்க பணிகளை எதிர்த்தால் வாங்கன் மற்றும் ஜகாலிங்காவு மக்களுக்கு பொருளாதார வகையில் உதவி செய்வதாகவும், அவுஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் இந்த பிரச்னை குறித்து பேசும்வரை போராட்டம் நடத்த அவுஸ்ரேலிய சுற்றுப்புறசூழல் பாதுகாப்பு குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வசதியாக தேவையான நிதியுதவி வழங்க சாண்ட்லர் பவுண்டேசன் உறுதி கூறியுள்ளது.

கலிலி பகுதி எரிபொருள் தொழில்நிறுவனங்கள் ஏற்கனவே மூடப்படும் நிலையில் உள்ளது. அதைப்போல நிலக்கரி சுரங்க பணிகளும் நிறுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் அவுஸ்ரேலியா முழுவதும் உள்ள சுரங்கங்களை கைப்பற்ற தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். மனித உரிமை கண்காணிப்பு தலைமை செயல் அதிகாரி கென் ரோத் அரசை மிரட்டி தனது குழுவுக்கு சிறப்பு நாடாளுமன்ற குழு கூட்டத்தில் அறக்கட்டளை அந்தஸ்து பெற்றுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் சாண்ட்லர் அறக்கட்டளை சார்பில் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் சுரங்கபணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. மிக்க நன்றி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபற்றி அதானி குழுமத்தின் அவுஸ்ரேலியா செயல் அதிகாரி ஜெயக்குமார் ஜனகராஜ் கூறுகையில் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக எல்லை தாண்டி நிதிஉதவி செய்யப்பட்டு இருப்பது இந்த மின்னஞ்சல் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்கள் நோக்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அல்ல. மாறாக பணியை நிறுத்துவது, முதலீட்டை நிறுத்துவது என்றார்.