நீங்கள் தான் இவனுக்கு எல்லாம்- கண்ணீரில் கலங்கிய தாய்

அவுஸ்திரேலியாவில் தன் மகனின் நிலைமையை சக மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாய் ஒருவர் கண்ணீருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் கண்கலங்க வைத்ததுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தைச் சேர்ந்தவர் Sonia Buckley. இவருக்கு புல்லி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவர் கற்றல் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறு(ADHD, ODD) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்.

எளிதில் அனைவரிடமும் கோபப்படக்கூடிய தன்மை கொண்டவர். இதனால் சக பள்ளி மாணவர்களும் இவருடன் வந்து பழகுவதற்கு சற்று அஞ்சுவர்.

இது போன்ற சூழ்நிலையில் பள்ளியில் சகமாணவர்கள் தங்களுடைய பிறந்த நாளின் போது நண்பர்களை வீட்டிற்கு அழைப்பது மற்றும் அவர்களுடன் மகிழ்ச்சியாக விளையாடுவதும் போன்று இருந்துள்ளனர். ஆனால் புல்லியிடம் மட்டும் சக மாணவர்கள் பேசுவதும் இல்லை, எந்த ஒரு பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதும் இல்லை. இது அச்சிறுவனை பெருமளவு பாதித்துள்ளது.

இதனால் மனமுடைந்த சிறுவன் தன் அம்மாவிடம் இது போன்ற செயல்கள் எல்லாம் நடக்கும் போது கண்ணீர் விட்டு அழுத்துள்ளான். இதுவே நாளைடைவில் அவனுக்கு ஒரு ஏக்கமாக மாறியுள்ளது.

இதனால் மனமுடைந்த அவனின் தாய், தன் மகனின் நிலைமையை கண்டு பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், இதில் நான் யாரையும் குறை கூறவில்லை எனவும், எந்த ஒரு பெற்றோரையும் தவறாக கூறவில்லை எனவும் ஆரம்பித்துள்ளார். அதையும் மீறி தான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் தன்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என கூறினார்.

பேசத் தொடங்கும் போது அவர் அருகில் மகனும் இருந்தார். தன்னுடைய மகன் (ADHD, ODD) ஆல் பாதிக்கப்பட்டவன் எனவும் அவனுக்கு தற்போது தான் 7 வயது ஆகிறது எனவும் ஆனால் அவனோ தினமும் தன்னிடம் வந்து தன்னுடைய பள்ளி நண்பர்கள் யாரும் தன்னை அருகில் சேர்த்து கொள்வது இல்லை எனவும், எந்த ஒரு விளையாட்டிலும் சேர்த்துகொள்வதும் இல்லை என்றும் பல துன்பங்களை கூறி தன்னிடம் தினம் தினம் அழுகிறான்.

உங்களின் நிலைமை தனக்கு புரிகிறது என்றும், ஆனால் இவன் உங்கள் நண்பன் இல்லையா, தன் மகனை இனிமேல் தயவுசெய்து பிரித்து பார்க்காதீர்கள் எனவும் கண்ணீர் மல்க கூறினார். ஆறு நிமிடம் ஓடும் இத்தாயின் கண்ணீரானது காண்போரை கண்கலங்கவைத்துள்ளது.

mum-reads-out-moving-open-letter-about-her-son-who-is-a-bully

http://www.mirror.co.uk/news/world-news/he-no-friends-tearful-mum-9074225