அவுஸ்ரேலியாவில் பொது இடங்களில் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அணிவதைத் தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ஆளுங் கூட்டணி தீர்மானித்துள்ளது. தலையை மறைக்கும் துணி மற்றும் ஏனைய மத அடையாளங்களை அரச ஊழியர்கள் அணிந்து வருவதைத் தடை செய்வது குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது. அவுஸ்ரேலியாவில் வேகமாக வளர்ந்துவரும் தீவிர வலது சாரி சுதந்திரக் கட்சியின் வளர்ச்சியை தடுப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக அரசின் இந்த நடவடிக்கை கள் நோக்கப்படுகின்றன. இந்த தடையானது பாடசாலை மற்றும் நீதிமன்றம் போன்ற இடங்களில் அமுல்படுத்தப்படும் எனத் ...
Read More »செய்திமுரசு
அவுஸ்ரேலிய இருபது 20 குழாமில் 36 வயதுடைய க்ளிங்கர் அறிமுக வீரர்
இலங்கைக்கு எதிராக இம்மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாமில் அறிமுக வீரராக 36 வயதுடைய மைக்கல் கிளிங்கர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அத்துடன், மூவகை சர்வதேச கிரிக் கெட் போட்டிகளிலும் விளையாடிய அனுபசாலியான விக்கெட்காப்பாளர் திமத்தி (டிம்) பெய்ன் 6 வருடங்களின் பின்னர் குழாமுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர்களை விட வேகப்பந்துவீச்சாளர் ஜய் றிச்சர்ட்சன், சகலதுறை வீரர் அஷ்டன் டேர்னர் ஆகியோரும் அறிமுக வீரர்களாக அவுஸ்திரேலிய இருபது 20 கிரிக்கெட் குழாமில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான ...
Read More »குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை
முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்திற்கு இலங்கை பிரஜா உரிமை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கிய தலைவராக செயற்பட்ட இவர், கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று அந் நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக் கொண்டார். இதனையடுத்து, கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு மீண்டும் சுற்றுலா விசாவில் வந்த அவர் (இலங்கைப் பிரஜை அல்லாத நிலையில்) அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். எனினும், கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் ...
Read More »அகதிகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு முறை ஒப்பந்தத்திற்கு டிரம்ப் மதிப்பளிப்பார்
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்ட் டிரம்ப் அகதிகளுக்கு விதித்துள்ள தடை பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தின் இறுதியில் கையெழுத்தான அவுஸ்ரேலிய-அமெரிக்க அகதிகள் ஒப்பந்தம் என்னவாகும் என்பது தொடர்பான அச்சமும் நிலவி வந்தது. இந்த நிலையில், அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களான நவுரு மற்றும் மனுஸ்தீவில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்தும் ஒரு முறை ஒப்பந்தத்திற்கு மதிப்பளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளதாக அவுஸ்ரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் உடனான ...
Read More »வித்தியாசமான அவுஸ்ரேலிய அணியை எதிர்பாருங்கள்!
இந்த முறை வித்தியாசமான அவுஸ்ரேலிய அணியை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியான இந்தியா சந்திக்கும் என்று மிட்செல் ஜான்சன் எச்சரிக்கை செய்துள்ளார். ஓய்வு ஒழிச்சலற்ற சுழற்பந்த் கொண்டு இந்திய அணிக்குத் தொல்லைகள் கொடுக்கும் அவுஸ்ரேலிய அணி என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார். சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகைக்கு மிட்செல் ஜான்சன் கூறும்போது, “இந்தியாவில் பிட்ச்கள் பந்துகள் திரும்புவதற்கு சாதகமாக அமையும். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகியவை தொடரை இழந்துள்ளன, இந்நிலையில் அவுஸ்ரேலியா அங்கு செல்வது சுவாரசியமானது. 2 அல்லது 3 ஸ்பின்னர்களுடன் அவுஸ்ரேலியா ...
Read More »எனது முதல் ரசிகை மனைவி தான்- பெடரர் ருசிகர
எனது முதல் ரசிகை என் மனைவி தான் என்று அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கோப்பையை கைப்பற்றிய பெடரர் ரோஜர் பெடரர் பேட்டியளித்துள்ளார். சமீபத்தில் நடந்த அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றினார். 2012-ம் ஆண்டுக்கு பிறகு அவர் வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டார். மொத்தத்தில் 18-வது கிராண்ட்ஸ்லாம் மகுடமாக அவருக்கு அமைந்தது. தாயகம் திரும்பிய 35 வயதான பெடரருக்கு சொந்த ஊரில் ரசிகர்கள் ...
Read More »தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பேன்! – மைத்திரி
தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் அரசாங்கம் அக்கறையுடனேயே செயற்படுகின்றது என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறீலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், 30 ஆண்டுகளாக நீடித்த போரின்போது, சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் செய்த தியாகத்தை மறக்கமுடியாது. தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன். எதிர்கால தேசிய பாதுகாப்புக்காக ஆற்றல், புலனாய்வு, அனுபவம் என்பன புதிய தொழிநுட்பத்துடன் இணைக்கப்படவேண்டும். எனவே நாட்டின் பாதுகாப்புப் ...
Read More »அவுஸ்ரேலிய உணவகத்தில் ஊழியரின் தகாத நடத்தை!
அவுஸ்ரேலிய நாட்டில் உள்ள KFC உணவகத்துக்கு Ryan Close என்ற வாடிக்கையாளர் சென்றுள்ளார். பர்க்கரில் முட்டையால் செய்யப்படும் mayo என்னும் sauce வகையை பர்க்கரின் உள்ளே வைத்து கொண்டு வர உணவக ஊழியரிடம் கூறினார். ஆனால் அவர் கூறிய பர்க்கர் வகையை உணவக ஊழியர் அவருக்கு வைக்கவில்லை. அதற்கு பதிலாக கிரீம் sauce அதிகளவில் வழியும் வகையில் ஒரு பர்கரே அவர் சாப்பிடும் டேபிளுக்கு வந்தது. இதனால் அதை அவர் சாப்பிட பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டார். இந்த விடயத்தை பற்றி கோபமாக Ryan தன் ...
Read More »அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல
எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கப்டன் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் திகதி தொடங்குகிறது. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையில், ...
Read More »வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஸ்டூவர்ட் லா நியமனம்
வெஸ்ட் அணியின் பயிற்சியாளராக அவுஸ்ரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் லா நியமிக்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் அந்த அணிக்கு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஸ்டூவர்ட் ‘லா’வை தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இவரது பதவிக்காலம் இரண்டு வருடமாகும். அவுஸ்ரேலிய அணியின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேனாக விளங்கிய லா, குயின்ஸ்லாந்து மாநில அணிக்காக ஷெபில்டு ஷீல்டு தொடரில் ...
Read More »