தேசிய பாதுகாப்பையும், பிராந்திய பாதுகாப்பையும் பாதுகாப்பதில் அரசாங்கம் அக்கறையுடனேயே செயற்படுகின்றது என சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பேபுஸ்ஸவில் உள்ள சிறீலங்காவின் இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், 30 ஆண்டுகளாக நீடித்த போரின்போது, சிறீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையினரும் செய்த தியாகத்தை மறக்கமுடியாது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன்.
எதிர்கால தேசிய பாதுகாப்புக்காக ஆற்றல், புலனாய்வு, அனுபவம் என்பன புதிய தொழிநுட்பத்துடன் இணைக்கப்படவேண்டும்.
எனவே நாட்டின் பாதுகாப்புப் படைகளைப் பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.