அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல

எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவுஸ்ரேலிய அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல என்று இந்திய அணியின் முன்னாள் கப்டன் சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி புனேயில் வருகிற 23-ந் திகதி தொடங்குகிறது. மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், அவுஸ்ரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

‘எதிரணியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது. அவுஸ்ரேலியா வலுவான அணியாகும். இந்திய சூழ்நிலையில் ஆடுவது கடினம் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் நாம் மெத்தனமாக இருந்து விடக்கூடாது.

இந்த போட்டி தொடருக்கு இந்திய அணி சிறப்பாக தயாராகி இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இருப்பினும் அவுஸ்ரேலியா அணியை கையாள்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன்’ என்றார்.