நுட்பமுரசு

ஒரே போனில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம்

நீங்கள் ஐபோன் கருவி வைத்துள்ளீர்களா? முதலில் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து அதன் வலது மூலையில், உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி பின்பு, வலது புறத்தில் உள்ள கியர் ஐகானைக் அழுத்த வேண்டும். பின்பு, ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் பட்டனை க்ளிக் செய்யவும். அவ்வளவு தான் இப்போது உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையலாம். வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி யூசர் நேம் டைப் செய்து நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை க்ளிக் ...

Read More »

ஒரே ராக்கெட் மூலம் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டம்

ஒரே ராக்கெட் மூலம் 83 வெளிநாட்டு செயற்கைகோள்களை, வரும் ஜனவரி இறுதியில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகள், பி.எஸ்.எல்.வி சி37 என்ற ஒரே ராக்கெட்டில் 83 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் 22–ஆம் தேதி பி.எஸ்.எல்.வி. சி–சி34 ராக்கெட் மூலம் 1,288 கிலோ எடைகொண்ட 22 செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பி சாதனை படைத்து உள்ளது. ரஷியாவின் விண்வெளி நிறுவனம் கடந்த 2014–ஆம் ஆண்டு ஒரே ராக்கெட்டில் அதிகபட்சமாக 37 ...

Read More »

சொன்னதை கேட்கும் ரோபோ கரம்!

பெரிய தொழிற்சாலைகளில் தான், ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்ற, ஒரு சீன நிறுவனம் முன்வந்திருக்கிறது. இந்நிறுவனம் உருவாக்கிய, ‘டூபாட் எம்-1’ என்ற ரோபோ கரம், சிறிய நிறுவனங்களில், திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை, செம்மையாக செய்கிறது. டூபாட் ரோபோவை, விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் கணினிகள் மூலம் நிரல்களை எழுதி இயக்க முடியும். 52 செ.மீ., உயரம் உள்ள இந்த ரோபோவால், 40 செ.மீ., துாரம் வரை கையை நீட்ட முடியும். இந்த ரோபோவுக்கு, 1.5 கிலோ எடையுள்ள பொருட்களை ...

Read More »

இரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்!

நோயாளிக்கு தரும் ரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை வேகமாக பிரித்தெடுப்பது, மருத்துவர்களுக்கு சவாலான வேலை. இதை எளிதாக்க, காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந்திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம், ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டிடியூட்’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன், ‘ஆன்டிபாக்டி’யை மருத்துவர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாக்டியை மிக நுண்ணிய இரும்புத் துகள்களில் பூசி, அத்துகள்களை ரத்தத்தில் ...

Read More »

உடற்பயிற்சி கருவி

இந்தக் கருவியை வாங்கும் பொழுது ஒரு கேம் அப்ளிகேஷனும் கொடுக்கப்படுகிறது. இந்த உடற்பயிற்சி கருவியின் நடுவே ஸ்மார்ட் போனை வைத்து விளையாடும் போது அதற்கேற்றவாறு உடலும் அசைகிறது.

Read More »

2017-ல் வாட்ஸ் ஆப்…?

தொழில்நுட்ப உலகில் மாற்றம் ஏற்பட்டு வரும் வேகத்தைப் பார்த்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்போன் சார்ந்து நிகழும் மாற்றங்கள் இன்னும் வேகமாக, இன்னும் மலைப்பாக இருக்கின்றன‌. சில ஆண்டுகளுக்கு முன்வரை, செல்போன் என்றால் நோக்கியா என்றிருந்தது. உயர் ரகப் பிரிவில் பிளாக்பெர்ரி ஆதிக்கம் செலுத்தியது. இன்றோ நோக்கியா இருந்த இடம் தெரியவில்லை. பிளாக்பெரி ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்தப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்று ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளம் என்றால் ஆண்ட்ராய்டும், ஐ.ஓ.எஸ்., ஆகியவை மட்டுமே என்றாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் வாட்ஸ் ஆப் சேவையில் ...

Read More »

பார்வை பறிபோனவர்களும் இனி பார்க்க முடியும்!

பார்வை பறிபோனவர்களாக இருட்டு வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் பலருக்கு பார்வையளிக்கும் புதிய தொழில்நுட்பம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டு, கைமேல் பலனளிக்க தொடங்கியுள்ளது. செகண்ட் சைட் எனும் நிறுவனம் ‘பயோனிக் ஐ’ என்ற பெயரில் சாதனை கண்டுபிடிப்பு ஒன்றை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பயோனிக் ஐ சாதனத்தின் மூலம் பார்வை பறிபோனவர்களுக்கு மீண்டும் பார்வையைளிக்க முடியும் என்பதை பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். லண்டன் அரசாங்கத்தின் தேசிய சுகாதார சேவையின் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பார்வை பறிபோன பத்து பேருக்கு கண் பார்வையளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

Read More »

கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தப்பட்டது

உலகில் முதன் முறையாக பிறவியிலேயே கை இல்லாதவருக்கு இறந்தவரின் கை பொருத்தி போலந்து வைத்தியர்கள் சாதனை படைத்தனர். போலந்து நாட்டைச் சேர்ந்த 32 வயது வாலிபர் பிறவியிலேயே மணிக்கட்டுக்கு கீழ் விரல்கள் அதாவது கை இல்லாமல் பிறந்தார் இதனால் மிகவும் கஷ்டப்பட்டு வந்த அவர் விரோல்கலா மருத்துவ பல் கலைக்கழக ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்  ஆடம் டொமேன்ஸ் விகாவிடம் சென்று சிகிச்சை ஆலோசனை பெற்றார். அப்போது மரணம் அடைந்த ஒருவரின் கையை தானமாக பெற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்த முடிவு செய்யப்பட்டது. ...

Read More »

ப்ளூடூத் வசதியுடன் புதிய 2.2 ஸ்பீக்கர்

ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய 2.2 மல்ட்டிமீடியா ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. ZEB-BT361RUCF என்று அழைக்கப்படும் இந்த ஸ்பீக்கரின் துணை ஸ்பீக்கர்கள் மற்றும் ஊஃப்பருக்கு மரப்பெட்டி அமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பெட்டிக்குள் அமைக்கப்பட்டுள்ள இரண்டு 4-அங்குல சப்வூஃப்பர் டிரைவர்கள் அறைக்குள் திரையரங்கம் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என்று ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதில் ப்ளூடூத் இணைப்பு பெறும் வசதி, USB போர்ட், SD சப்போர்ட் மற்றும் உள்ளமைக்கப்பட்ட FM டியூனர் ஆகிய அம்சங்கள் உள்ளன. சப்வூஃப்பரின் ஒலி வெளிப்பாட்டு சக்தி 25W ஆகும், மல்ட்டிமீடியா கட்டுப்பாடுகளை ...

Read More »

தனிம அட்டவணையில் நான்கு புதிய தனிமங்கள்!

கல்வி நிலையங்களிலும் ஆய்வுக் கூடங்களிலும் பயன்படுத்தப்படும், ‘பீரியாடிக் டேபிள்’ எனப்படும் தனிம அட்டவணையில், புதிதாக நான்கு தனிமங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. தனிம அட்டவணையில் புதிய தனிமத்தை சேர்ப்பதற்கு, ஐ.யு.பி.ஏ.சி., என்ற சர்வதேச வேதியியல் அமைப்பு பொறுப்பு வகிக்கிறது. புதிய தனிமத்தை கண்டுபிடித்தவர், இந்த அமைப்பிடம் விண்ணப்பித்தால், அதன் விஞ்ஞானிகள் குழு பரிசீலித்து, தகுதியிருந்தால், உலகுக்கு அறிவிக்கும். அண்மையில் சேர்க்கப்பட்ட தனிமங்களுக்கு, 113, 115, 117 மற்றும் 118 ஆகிய அணு எண்கள் தரப்பட்டுள்ளன. இவற்றின் பெயர்கள் முறையே நிஹோனியம், மாஸ்கோவியம், டென்னிசைன் மற்றும் ஓகானிசன். ...

Read More »