ஒரே போனில் ஒன்றுக்கு மேற்பட்ட இன்ஸ்டாகிராம்

நீங்கள் ஐபோன் கருவி வைத்துள்ளீர்களா?
  • முதலில் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து அதன் வலது மூலையில், உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி பின்பு, வலது புறத்தில் உள்ள கியர் ஐகானைக் அழுத்த வேண்டும்.
  • பின்பு, ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் பட்டனை க்ளிக் செய்யவும்.
  • அவ்வளவு தான் இப்போது உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையலாம்.
வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.?

கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி யூசர் நேம் டைப் செய்து நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை க்ளிக் செய்யவும்.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி.?
  • முதலில் கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை க்ளிக் செய்யவும்.
  • பின்னர் ஸ்க்ரால் டவுன் செய்ய இரண்டு லாக்அவுட் பட்டனை தெரியும்.
  • அதில் முதல் லாக் அவுட் பொத்தானை அழுத்தி – லாக்அவுட் ஆப் யூசர் நேம் டாப் செய்து, பாப்அப் மெனுவில் லாக் அவுட் டாப் செய்யவும்.
  • நீங்கள் அனைத்து கணக்கிலிருந்தும் லாக்அவுட் செய்ய விரும்பினால், லாக் அவுட் ஆப் ஆல் அக்கவுண்ட்ஸ் டாப் செய்து பாப்-அப் மெனுவில் லாக்அவுட் பொத்தானை அழுத்தினால் போதும்.
  • நீங்கள் பயன்படுத்தும் அனைத்து அக்கவுண்ட்களும் லாக் அவுட் ஆகிவிடும்.
இதுவே ஆண்ட்ராய்டு கருவி என்றால்,
  • மேலே கூறப்பட்டுள்ளவாறே இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து அதன் கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி பின்பு, மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளை க்ளிக் செய்யவும்.
  • பின்னர், ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் அழுத்தி அதில் உங்களது இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையலாம்.
ஆண்ட்ராய்டு கருவியில் வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.?

முதலில் கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை அழுத்தி மேல் இடது புறத்தில் யூசர் நேம் டைப் செய்து நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை க்ளிக் செய்தால் போதும். நீங்கள் தேர்வு செய்த அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும்.