நுட்பமுரசு

பி.எம்.டபுள்யூ-வின் அதிநவீன தானியங்கி கார்

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ அதிநவீன தானியங்கி கார் ஒன்றை வெளியிடுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகில் தானியங்கி கார்களை தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் புதிய ஒப்பந்தங்களின் மூலம் இணைந்து தானியங்கி கார்களை உருவாக்க பணியாற்றி வருகின்றன. அந்த வகையில் பி.எம்.டபுள்யூ. நிறுவனமும் தானியங்கி கார்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்ற நிறுவனங்களை போன்று இல்லாமல் பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் தானியங்கி கார் லெவல் 5 தானியங்கி முறைகளை ...

Read More »

ஜிமெயில் அட்டாச்மென்ட் வீடியோக்களை பார்க்கும் வசதி அறிமுகம்

கணினிகளில் பயன்படுத்தக் கூடிய ஜிமெயில் சேவையில் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் அவற்றை பிரீவியூ பார்க்கும் வசதி வழங்கப்பட உள்ளது. ஜிமெயில் சேவையை பயன்படுத்துவோருக்கு கூகுள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. புதிய வசதியை கொண்டு ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யும் முன் பார்க்க முடியும். வீடியோ பயனுள்ளதாக இருப்பின் அதை டவுன்லோடு செய்யலாம். புதிய வசதியின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேட்டாவினை சேமிக்க முடியும். முன்னதாக ஜிமெயில் மூலம் அனுப்பப்படும் வீடியோக்களை டவுன்லோடு செய்யாமல் பார்க்க முடியாது. புதிய அப்டேட் ...

Read More »

சந்திரனில் பீர் தயாரிக்கப் போகிறதா இந்தியா?

கடந்த வியாழனன்று மக்களவையில் சுவையான கேள்வியொன்று விண்வெளித் துறையை கைவசம் வைத்திருக்கும் பிரதமரின் பதிலுக்காக காத்திருந்தது. கேள்வி இந்தியா நிலவில் பீர் காய்ச்சும் திட்டத்தை வைத்திருக்கிறதா? குறிப்பாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அத்திட்டத்தை நிறைவேற்றப் போகிறதா என்று கேட்டார் திருணமுல் கட்சியைச் சார்ந்த உறுப்பினரான சிசிர் குமார் அதிகாரி. சிசிர் குமாரின் கேள்வியானது மூன்று விதமானது: 1) இந்திய விண்கலம் ஏதேனும் நிலவில் பீர் தயாரிக்கும் திட்டம் உள்ளதா? 2) ஆம் எனில் ஆய்வு திட்டத்தின் விவரங்கள், ஈஸ்ட்டினைக் கொண்டு தயாரிக்கும் சாத்தியம் ...

Read More »

மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டில் துவங்க இருப்பதாக சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. சாம்சங் நிறுவனம் சில ஆண்டுகளாக மடிக்கும் வசதி கொண்ட டிஸ்ப்ளேக்களை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் மடிக்கும் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் 2017 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு வாக்கில் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் துவங்க இருக்கும் ஐஎஃப்ஏ 2017 விழாவில் சாம்சங் மடிக்கும் வசதி ...

Read More »

ஒரே நாளில் வீடு கட்டிய முப்பரிமாண இயந்திரம்!

அழகிய வீட்டை, 24 மணி நேரத்திற்குள் கட்ட முடியுமா? ‘அபிஸ் கோர் 3டி’ என்ற வீடு கட்டும் முப்பரிமாண இயந்திரம் இருந்தால் போதும்! ரஷ்யாவில், ஸ்டுபினோ என்ற இடத்தில், உறைபனிக் காலத்தில், இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, அபிஸ் கோர் நிறுவனம். சிமென்ட் கலவை, இரும்புக் கம்பிகள் போன்றவற்றை கையாளும், அபிஸ் கோர் 3டி இயந்திரம், 360 டிகிரி கோணங்களிலும் சுற்றிச் சுற்றி இயங்கும் திறன் கொண்டது. ஒரு கிரேன் மூலம், வீட்டுமனையில் கொண்டு போய் இந்த இயந்திரத்தை வைத்து, சிமென்ட் கலவையை குழாய் ...

Read More »

பிளே ஸ்டேஷன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட புதிய சேவை

பிளே ஸ்டேஷன் சாதனம் இன்றி விண்டோஸ் கணினிகளிலும் பிளே ஸ்டேஷன் கேம்களை விளையாட புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையின் முழு தகவல்களை பார்ப்போம். சோனியின் பிளே ஸ்டேஷன் சாதனத்தை வாங்காமல் அதன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட பிளே ஸ்டேஷன் நௌ எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ பயன்படுத்தி பிளே ஸ்டேஷன் 4 கேம்களை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகளில் விளையாட முடியும். தற்சமயம் பிளே ஸ்டேஷன் நௌ சேவைக்கான சோதனை நடைபெற்று ...

Read More »

செவ்வாய்க்கு காந்த கவசம்!

செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர். பூமியில் பேரழிவு ஏற்பட்டால், மனித இனம் பிழைக்க, அருகாமையில் உள்ள செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியைப் போலவே, ...

Read More »

‘குவாண்டம்’ கணினி வந்துவிட்டது!

கணினி நிறுவனமான, ஐ.பி.எம்., சமீபத்தில் ‘குவாண்டம்’ ரக கணினி சேவையை, ஐ.பி.எம்.-க்யூ., என்ற பெயரில், கடந்த வாரம் அறிவித்து உள்ளது.தற்போதுள்ள கணினிகளால், கையாள முடியாத அளவுக்கு, ஏராளமான தகவல்களை, பல லட்சம் மடங்கு கையாள்வதோடு, பல்லாயிரம் மடங்கு வேகத்திலும் கையாளும் திறன் கொண்டவை, குவாண்டம் கணினிகள்.கடந்த சில மாதங்களாக, ‘குவாண்டம் எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற சேவையை, இணையம் மூலம் பல நிறுவனங்களுக்கு அளித்து, குவாண்டம் கணினி மூலம், சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறது ஐ.பி.எம். விரைவில், வர்த்தக ரீதியில் குவாண்டம் கணினிகளை தயாரித்து விற்கவிருப்பதால், இவற்றுக்கு ...

Read More »

இந்தியாவின் முதல் பெண் கார் மெக்கானிக்

உத்திரபிரதேச மாநிலம், மீரட்டில் இருக்கும் டிம்மக்கியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர், 24 வயதே நிரம்பியவர் பூனம் சிங். இவர் முக்காடு போட்டுக் கொண்டு செல்லும் வழக்கமான கிராமத்து பெண் அல்ல என்பதை, இவர் செய்யும் வேலையை வைத்தே சொல்லிவிடலாம். ஆம், ஆண்களுக்கான பணியாக அறியப்படும் கார் மெக்கானிக் வேலையை, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மீரட்டைச் சேர்ந்த டீலர்ஷிப்பின் சர்வீஸ் சென்டரில் (Mann Service Center) இவர் செய்து வருகிறார்! ஆட்டோமொபைல் மெக்கானிக்கிற்கான பட்டப் படிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்திருக்கும் ...

Read More »

‘ஏசி’க்களில் கவனம்!

வெயில் காலத்தில் ‘ஏசி’ விற்பனை அதிகம். குளிர்ச்சி வேண்டும் என்பதற்காக ‘ஏசி’யை 23 டிகிரிக்கும் குறைவாக வைக்கக் கூடாது. அப்போது ‘ஏசி’ அதிக பணிச்சுமைக்கு உட்பட்டு திணறும். ‘ஏசி’ மெஷின் பாகங்களின் வெப்ப நிலையும் அதிகரிக்கும். இதனால் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. ‘ஏசி’ ஓடிக் கொண்டிருக்கும் போது எக்காரணம் கொண்டும் ‘ரூம் ஸ்பிரே’ அடிக்கக்கூடாது. பெர்ப்யூம்கள் ‘ஏசி’ மெஷினின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி விடும். 1 டன் அளவுள்ள ‘ஏசி’யை விட, 1.5 டன் அளவுள்ள ‘ஏசி’யில் மின்சார நுகர்வு குறைவாக இருக்கும். ...

Read More »