பிளே ஸ்டேஷன் சாதனம் இன்றி விண்டோஸ் கணினிகளிலும் பிளே ஸ்டேஷன் கேம்களை விளையாட புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ என பெயரிடப்பட்டுள்ள இந்த சேவையின் முழு தகவல்களை பார்ப்போம்.
சோனியின் பிளே ஸ்டேஷன் சாதனத்தை வாங்காமல் அதன் கேம்களை விண்டோஸ் கணினியில் விளையாட பிளே ஸ்டேஷன் நௌ எனும் சேவை துவங்கப்பட்டுள்ளது. பிளே ஸ்டேஷன் நௌ பயன்படுத்தி பிளே ஸ்டேஷன் 4 கேம்களை விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினிகளில் விளையாட முடியும்.
தற்சமயம் பிளே ஸ்டேஷன் நௌ சேவைக்கான சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி குறித்து எவ்வித தகவலும் இல்லை. பிளே ஸ்டேஷன் நௌ சந்தா சோதனை அடிப்படையில் ஏழு நாட்களுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாதம் 19.99 டாலர்கள் அதாவது ரூ. 1322, மூன்று மாதங்களுக்கு 44.99 டாலர்கள் அதாவது ரூ. 2976 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிளே ஸ்டேஷன் நௌ சேவையில் பிரத்தியேக கேம்கள் மற்றும் பல்வேறு புதிய கேம்களும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் கீழ் கேம்களை விளையாட குறைந்த பட்சம் 5 எம்பி (5 mbps) அல்லது அதற்கும் அதிகமான இண்டர்நெட் வேகம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளே ஸ்டேஷன் நௌ சேவையின் கீழ் பிளே ஸ்டேஷன் 3, பிளே ஸ்டேஷன் 4 கன்சோல் கேம், கன்சோல்களுக்கு வழங்கப்படும் பிரத்தியேக கேம் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை பயன்படுத்த முடியும். கேமிங் சாதனங்களை தவிர்த்து கணினியில் கேமிங் விளையாடுவோருக்கு இந்த புதிய சேவை பயனுள்ளதாக இருக்கும்.
Eelamurasu Australia Online News Portal