பூமிக்கு மேல் 500 கி.மீ. தூரத்தில் விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை சீனா நிறுவியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் சீனா முன்னேறி வருகிறது. அமெரிக்காவுக்கு போட்டியாக விண்வெளியில் தனியாக ஆய்வகம் அமைத்து வருகிறது. சந்திரனுக்கு ஆள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது விண்வெளியில் ஏற்படும் மாற்றங்களை உடனுக்குடன் அறிய அதிநவீன எக்ஸ்ரே டெலஸ்கோப்பை நிறுவியுள்ளது. 2.5 டன் எடையுள்ள இந்த டெலஸ்கோப் மார்ச்-4பி ராக்கெட் மூலம் நேற்று விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வடமேற்கு சீனாவில் கோபி பாலைவனத்தில் உள்ள ஜியூகுயான் ...
Read More »நுட்பமுரசு
தினம் ஒரு பொன்மொழி
பொன்மொழி பிரியர்கள் தினம் ஒரு பொன்மொழியைப் பெறும் சேவையை வழங்கும் வகையில் ‘கோட்டீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, அதன் பயனாளிகளுக்குத் தினமும் ஊக்கம் அளிக்கும் ஒரு பொன்மொழி அல்லது மேற்கோளைத் தேர்வு செய்து அனுப்புகிறது. செல்போன் திரையைப் பார்க்கும் போதே இந்த மொழிகள் ஊக்கம் அளிக்கும் என்பதோடு, யாம் பெற்ற ஊக்கம் மற்றவர்களும் பெருக என்று, இந்த மொழிகளை சமூக ஊடகச் சேவைகளில் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். மேற்கோகளுக்கான வடிவமைப்பு அருமையாக இருப்பதோடு, இணையவாசிகள் தாங்கள் விரும்பும் பொன்மொழி வகைகளைத் ...
Read More »கற்றலில் உதவும் காணொளிகள்!
இணையத்தில் பொழுதுபோக்கு வீடியோக்கள் மட்டுமல்ல, பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவும் கல்வி வீடியோக்களும் அநேகம் இருப்பது தெரிந்த விஷயம்தான். இத்தகைய கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தரும் இணையதளங்களும் இருக்கின்றன. ‘கிளாஸ்ஹுக்’ தளமும், கல்வி சார்ந்த வீடியோக்களைத் தேடித் தருகிறது என்றாலும், முற்றிலும் புதுமையான முறையில் இதை நிறைவேற்றுகிறது. இந்தத் தளம், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவும் திரைப்பட கிளிப்களை அடையாளம் காட்டுகிறது. திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கணிதம், அறிவியல், உலக நடப்புகள் சார்ந்த உரையாடல்கள் இடம்பெறுவது உண்டல்லவா? இத்தகைய உரையாடல் கொண்ட வீடியோக்களை ...
Read More »ஹூவாய் ஹானர் 9 வெளியானது!
ஹூவாயின் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள். ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் ஹூவாய் ஏற்கனவே வெளியிட்ட ஹூவாய் பி10 ஸ்மார்ட்போனும் ஒன்று தான். இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் பிரான்டிங் மற்றும் செய்கா லென்ஸ் வழங்கப்படவில்லை. ஹானர் பி10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 960 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. ஹானர் 9 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ...
Read More »உங்கள் பாஸ்வேர்டு வலுவானதா?
பாஸ்வேர்டு விஷயத்தில் அலட்சியம், அறியாமை இரண்டுமே ஆபத்தானது. ஏனெனில் இவை ஹேக்கர்களின் வேலையை இன்னும் சுலபமாக்குகின்றன. பாஸ்வேர்ட் திருட்டு தொடர்பாக அடிக்கடி வெளியாகும் செய்திகள் மூலம் இதை உணரலாம். இணைய அமைப்பில் உள்ள ஓட்டைகளில் நுழையும் சாமர்த்தியம் ஹேக்கர்களுக்குக் கைகொடுத்தாலும், உண்மையில் பாஸ்வேர்டு பயன்பாடு தொடர்பான அடிப்படை விழிப்புணர்வு இல்லாமலிருப்பது மற்றும் அப்படியே விழிப்புணர்வு இருந்தாலும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டும் இணையவாசிகளின் போக்கே ஹேக்கர்களுக்கு அணுகூலமாக அமைந்து விடுகிறது. ஒரு பாஸ்வேர்டு… ஒரே பாஸ்வேர்டு… உங்கள் பாஸ்வேர்ட் பாதுகாப்பானதாக இருப்பதை உறுதி செய்துகொள்ள ...
Read More »ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 சிப்செட் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 836 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்டின் அடுத்த பதிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. சிறு மேம்படுத்தல்களுடன் ...
Read More »பறக்கும் டாக்சி
பறக்கும் டாக்சி சேவையை 2020ம் ஆண்டுக்குள் துபாய் மற்றும் டல்லாஸில் உபெர் தொடங்க உள்ளது. பேட்டரி மூலம் இயங்கும் இந்த பறக்கும் டாக்சியை பல விமான நிறுவனங்களும் உபெருக்காக தயாரிக்க உள்ளன.
Read More »ஸ்நாப்ஷாட் கிளாஸ்!
கேமரா இணைக்கப்பட்ட சன் கிளாஸை ஸ்நாப்ஷாட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. 10 விநாடி வீடியோக்களை எடுத்து ஸ்நாப்ஷாட் கணக்கு மூலம் நண்பர்களுக்கு அனுப்பலாம். கூகுள் கிளாஸைவிட குறைவான தொழில்நுட்பத்தில் இயங்கும்.
Read More »வாட்ஸ் அப்பில் மெசேஜை திரும்ப பெறும் புதிய வசதி அறிமுகம்!
உலகில் 120 கோடி பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில்(Beta Version 2.17.210) மெசேஜை திரும்ப பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தவறுதலாக மெசேஜை அனுப்பிவிட்டு அதை நீக்கவோ, திரும்ப பெறவோ வேண்டுமென்றால் Unsend என்ற ஆப்ஷனை உபயோகப்படுத்தலாம். நீங்கள் எந்த மெசேஜை திரும்ப பெற வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும், திரையில் காட்டப்படும் மெனுவில் Unsend என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், ...
Read More »அசுஸ் க்ரோம்புக் ப்ளிப் சி213 அறிமுகம்
தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் சர்வதேச சந்தையில் புதிய க்ரோம்புக் பிளிப் சி213 எனும் லேப்டாப் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. விலை மற்றும் விற்பனை தேதி அறிவிக்கப்படாத நிலையில் இதன் சிறப்பம்சங்கள். தாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான அசுஸ் புதிய லேப்டாப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. க்ரோம்புக் ப்ளிப் சி213 என அழைக்கப்படும் புதிய சாதனத்தில் 360 ஹின்ஜ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப் திரை இரண்டாக மடித்து வைத்தும் பயன்படுத்த முடியும். கூகுளின் க்ரோம் இயங்குதளம் கொண்டு இயங்கும் க்ரோம்புக்கில் கூகுள் செயலிகளான ...
Read More »