பொன்மொழி பிரியர்கள் தினம் ஒரு பொன்மொழியைப் பெறும் சேவையை வழங்கும் வகையில் ‘கோட்டீ’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஐபோன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, அதன் பயனாளிகளுக்குத் தினமும் ஊக்கம் அளிக்கும் ஒரு பொன்மொழி அல்லது மேற்கோளைத் தேர்வு செய்து அனுப்புகிறது.
செல்போன் திரையைப் பார்க்கும் போதே இந்த மொழிகள் ஊக்கம் அளிக்கும் என்பதோடு, யாம் பெற்ற ஊக்கம் மற்றவர்களும் பெருக என்று, இந்த மொழிகளை சமூக ஊடகச் சேவைகளில் பகிர்ந்து கொள்ளவும் செய்யலாம். மேற்கோகளுக்கான வடிவமைப்பு அருமையாக இருப்பதோடு, இணையவாசிகள் தாங்கள் விரும்பும் பொன்மொழி வகைகளைத் தேர்வு செய்துகொள்ளும் வசதியும் இருக்கிறது. அனிமேஷன் அலங்காரமும் கூடுதல் அழகு சேர்க்கிறது.
ஆயிரக்கணக்கான பொன்மொழிகளை இப்படி போன் திரையில் எளிதாக அணுக இந்தச் செயலி வழி செய்கிறது. பொன்மொழி வாசகங்களைப் படித்துப் புத்துணர்ச்சி பெறுபவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் செயலி இது.
மேலும் தகவல்களுக்கு: http://quoteedaily.com/