வாட்ஸ் அப்பில் மெசேஜை திரும்ப பெறும் புதிய வசதி அறிமுகம்!

உலகில் 120 கோடி பேரால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப்பில் பயனாளர்களின் வசதிக்கேற்ப புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில்(Beta Version 2.17.210) மெசேஜை திரும்ப பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தவறுதலாக மெசேஜை அனுப்பிவிட்டு அதை நீக்கவோ, திரும்ப பெறவோ வேண்டுமென்றால் Unsend என்ற ஆப்ஷனை உபயோகப்படுத்தலாம்.

நீங்கள் எந்த மெசேஜை திரும்ப பெற வேண்டுமோ அதை கிளிக் செய்ய வேண்டும், திரையில் காட்டப்படும் மெனுவில் Unsend என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும், ஆனால் மெசேஜ் அனுப்பிய ஐந்து நிமிடங்களுக்குள் திரும்பபெறவேண்டும்.

இதேபோன்று உங்களுடைய நண்பர் எங்கு இருக்கிறார் என்பதை Live Location ஆப்ஷன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

ஒரு நபர் தன்னுடைய Live Location-னை மற்றவருக்கு அனுப்பினால் அதன் மூலம் அவர் பயணிக்கும் இருப்பிடங்களை அறிந்து கொள்ள முடியும். மிக முக்கியமாக Text வடிவில் Colour Background-ல் Status வைத்துக்கொள்ள முடியும்.