ஹூவாய் ஹானர் 9 வெளியானது!

ஹூவாயின் ஹானர் பிரான்டு புதிய ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹானர் 9 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்.

ஹூவாய் ஹானர் 9 ஸ்மார்ட்போன் சீனாவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனும் ஹூவாய் ஏற்கனவே வெளியிட்ட ஹூவாய் பி10 ஸ்மார்ட்போனும் ஒன்று தான். இந்த ஸ்மார்ட்போனில் ஹானர் பிரான்டிங் மற்றும் செய்கா லென்ஸ் வழங்கப்படவில்லை.
ஹானர் பி10 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஹூவாய் கிரின் 960 மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டிருந்தது. ஹானர் 9 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கிரின் 960 பிராசஸர் மற்றும் 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் 9 லஸ்மார்ட்போன் 4ஜி நெட்வொர்க் வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஹானர் 9 சிறப்பம்சங்கள்:
* 5.15 இன்ச், 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
* 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கிரின் 960 சிப்செட்
* 4 ஜிபி ரேம்
* 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
* 20 எம்பி பிரைமரி கேமரா
* 8 எம்பி செல்ஃபி கேமரா
* ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம்
டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள ஹானர் 9 ஸ்மார்ட்போனில் வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், 3ஜி, 4ஜி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டடுள்ளது.
முதற்கட்டமாக சீனாவில் வெளியிடப்பட்டுள்ள ஹானர் 9 ஸ்மார்ட்போன் முன்பதிவு துவங்கிய முதல் நாளில் மட்டும் சுமார் 3,50,000 முன்பதிவுகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை முன்பதிவுகளும் ஒரே இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.