சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு ரஷியாவை சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று விண்வெளி ஆய்வு வீரர்கள் கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று புறப்பட்டு சென்றனர். பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ...
Read More »நுட்பமுரசு
மனிதர்களைத் தாங்கும் விண்கலத்தை விண்வெளியில் செலுத்திய சீனா
சீனா, அதிக காலம் மனிதர்களைத் தாங்கியிருக்கக்கூடிய விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்கலம் நேற்று ( காலை, கோபி (Gobi) பாலைவனத்தின் ஜிசுவான் (Ji-chuan) செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து இரு வீரர்களுடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது. ஜிங் ஹைபெங்(Jing Haipeng ), சென் டோங். (Chen Dong)மனிதர்களோடு பாய்ச்சப்படும் தனது ஆறாவது விண்கலத்துக்குச் சீனா தேர்ந்தெடுத்த விண்வெளி வீரர்கள் இவர்கள். தமது 50ஆவது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடவிருக்கும் ஜிங்கிற்கு இது மூன்றாவது விண்வெளி அனுபவம். 38 வயது சென்னுக்கு முதன்முறை. ஷென்ஸோ (Shenzhou) 11 என்ற பெயர் ...
Read More »விமானங்களில் சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனுக்கு தடை
சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனை யாரும் விமானங்களில் எடுத்து வரவும், எடுத்து செல்லவும் கூடாது என்ற உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த போன் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன. இப்படி சுமார் 100 புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் பொருள் பாதுகாப்பு ஆணையம் கூறியது. பேட்டரிகள் அதிக சூடாவதின் காரணமாகத்தான் இந்த ஸ்மார்ட் போன்கள் வெடிப்பதாகவும், தீப்பிடிப்பதாகவும் கூறப்பட்டது. இப்படி தொடர்ந்து புகார்கள் ...
Read More »பிலிப்ஸ் உருவாக்கியுள்ள சிக்கன ‘துபாய் விளக்குகள்!’
இப்போது உள்ளதைவிட மிகவும் சிக்கனமான எல்.இ.டி., விளக்குகளை உருவாக்க முடியுமா… பிலிப்ஸ் நிறுவனம், துபாய் அரசு, மாநகராட்சியுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சியில், அதி சிக்கனமான புதிய எல்.இ.டி., விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், துபாயில் நடந்த, ‘நீர், சக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி’யில் இந்த புதுமை விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘துபாய் விளக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எல்.இ.டி., விளக்குகள், குண்டு விளக்குகளை விட, 90 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி பிரகாசமாக எரிகின்றன. அதுமட்டுமல்ல, இவற்றின் ஆயுளும், 15 மடங்கு அதிகம்.துபாய் நகரின் மின் ...
Read More »பாதுகாப்பான ‘சின்ன’ முகவரி
நீளமான இணைய முகவரிகளைச் சுருக்கமான வடிவில் பகிர்ந்துகொள்ள உதவும் முகவரி சுருக்கச் சேவைகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக ‘தின்ஃபி.காம்’ அறிமுகமாகியுள்ளது. இந்தச் சேவை மூலம் இணைய முகவரிகளைச் சுருக்கும் போது அதற்கான பாஸ்வேர்டையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு சுருக்கப்பட்ட முகவரியுடன் பாஸ்வேர்டையும் சேர்த்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த பாஸ்வேர்டு உள்ளவர்கள் மட்டுமே சுருக்கத்தின் பின்னே உள்ள இணையப் பக்கத்தை அணுக முடியும். குழுவாகச் செயல்படும்போது, புதிய திட்டங்கள் தொடர்பான இணையத் தகவல்களை இப்படி பாஸ்வேர்டு பாதுகாப்புடன் பகிர்ந்துகொள்ளலாம். ...
Read More »சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறி
பனங்களியிலிருந்து பெறப்படும் பனாட்டுக்களை இலகுவான முறையில் உலரவிட்டுப் பயனடையும் நோக்குடன் சூரிய ஒளியில் பனாட்டு உலர்த்தும் நவீன பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு 12 ஆம் திகதி பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம்பெற்றது. இலங்கையிலேயே முதன் முதலாக யாழ்ப்பாணத்தில் இந்தப் பொறி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய பொறியியல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் மாலினி குமாரி ரணதுங்கவினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பொறியை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில் சிரேஷ்ட ஆராய்ச்சி நிபுணர் ...
Read More »விண்வெளி சுற்றுலா
வர்த்தக ரீதியான விண்வெளி பயணத்துக்கு சீனா திட்டமிட்டு வருகிறது. 2020-ம் ஆண்டு இந்த பயணத்தை தொடங்குகிறது ஜெப் பியோஸின் விண்வெளி ஆராய்சி நிறுவனமான புளு ஒரிஜின். இந்த விண்வெளி விமானம் தினசரி 20 பயணிகளுடன் கிளம்பி பூமிக்கு அப்பால் சென்று திரும்பும். இதற்கான கட்டணம் 2 லட்சம் டாலர் முதல் 2.5 லட்சம் டாலர் வரை இருக்கும். ராக்கெட்டை போல மேலே எழும் இந்த விண்வெளி ஓடம், விமானத்தை போல தரையிறங்கும் வகையில் இருக்கும்.
Read More »எலெக்ட்ரான் மூலம் காயங்களை விரைவில் ஆற்றும் புதிய முறை
எலெக்ட்ரான் மூலம் மனித உடலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் புதிய முறையை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய முறையின் மூலம் உடலின் செல் வளர்ச்சியைத் தூண்டி காயங்களை விரைவில் ஆற்ற முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கருவிகள் உடல் வெப்பத்தின் மூலம் இயங்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனித உடலின் வெப்பத்தால் இதில் உள்ள எலெக்ட்ரான்கள் தூண்டப்பட்டு அதன் மூலம் மின்சாரம் உற்பத்தியாகிறது. இந்த மின்சாரம் உடலின் செல் வளர்ச்சியை அதிகப்படுத்தி, காயங்களை விரைவில் ஆற்றும் வகையில் ...
Read More »சாம்சங் நிறுவனத்துக்கு ரூ.800 கோடி அபராதம்
SAMSUNG ஆப்பிள் – சாம்சங் நிறுவனங்களுக் கிடையிலான வழக்கில் அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் காப்புரிமை மீறல் காரணமாக ஆப்பிள் நிறுவனத்துக்கு 12 கோடி டாலர் (சுமார் ரூ.800 கோடி) அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களுக்கிடை யிலான இந்த வழக்கில் ஏற்கெனவே பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு சாம்சங் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்திருந்தது. இதற்கு எதிராக ஆப்பிள் மேல் முறையீடு செய்திருந்தது. சாம்சங் நிறுவனம் தங்களது காப்புரிமையான ...
Read More »ஆப்பிள் வாட்ச் 2
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதனுடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வை-பை, புளூடூத் என அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன. மேலும் தண்ணீர் உள்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும் சாலையில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.
Read More »
Eelamurasu Australia Online News Portal