நீளமான இணைய முகவரிகளைச் சுருக்கமான வடிவில் பகிர்ந்துகொள்ள உதவும் முகவரி சுருக்கச் சேவைகள் பல இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக ‘தின்ஃபி.காம்’ அறிமுகமாகியுள்ளது.
இந்தச் சேவை மூலம் இணைய முகவரிகளைச் சுருக்கும் போது அதற்கான பாஸ்வேர்டையும் உருவாக்கிக் கொள்ளலாம். அதன் பிறகு சுருக்கப்பட்ட முகவரியுடன் பாஸ்வேர்டையும் சேர்த்துப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்த பாஸ்வேர்டு உள்ளவர்கள் மட்டுமே சுருக்கத்தின் பின்னே உள்ள இணையப் பக்கத்தை அணுக முடியும். குழுவாகச் செயல்படும்போது, புதிய திட்டங்கள் தொடர்பான இணையத் தகவல்களை இப்படி பாஸ்வேர்டு பாதுகாப்புடன் பகிர்ந்துகொள்ளலாம்.
இணையதள முகவரி: http://thinfi.com/