ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும். இந்த வருடம் ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7பிளஸ் போன்களை அறிமுகப்படுத்தியது. இதனுடன் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் வாட்சுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
வை-பை, புளூடூத் என அனைத்து வசதிகளும் இந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ளன. மேலும் தண்ணீர் உள்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிபிஎஸ் வசதி உள்ளது. நாம் பயணம் மேற்கொள்ளும் சாலையில் எவ்வளவு டிராபிக் இருக்கிறது என்பதையும் தெரிவிக்கிறது.
Eelamurasu Australia Online News Portal