நடிகை ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து, நடிகை ராதா, 25ம் ஆண்டு திருமண நாளை, விமரிசையாக கொண்டாடினார். அலைகள் ஓய்வதில்லை படம் மூலம், தமிழ் திரையுலகில், அறிமுகமான நடிகை ராதா, 50; தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அம்பிகாவும், இவரும் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளனர். 1981 முதல், 1991 வரை, தமிழ் திரைப்படத்தில் கோலோச்சிய ராதா, 1991ல், ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து, மும்பையில், செட்டில் ஆனார். தற்போது தனியார், டிவிக்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில், நடுவராக ...
Read More »திரைமுரசு
தமிழில் பின்னணிகுரல் பேசிய பிரான்ஸ் நடிகை
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வெள்ளைக்கார பெண் வேடத்தில் நடித்து வந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரியன். இவரது உறவினர்கள் பாண்டிச்சேரியில் உள்ளனர். அதனால் அடிக்கடி பிரான்சுக்கும், பாண்டிச்சேரிக்கும் பறந்து கொண்டிருப்பார். பிரான்சில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நாடகங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியன். பாண்டிச்சேரிக்கு வரும்போது தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு சிறுசிறு வேடங்களில் நடித்தார். தற்போது புதுமுக இயக்குனர் எம்.எஸ்.எஸ் இயக்கும் மேல்நாட்டு மருமகன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கதைப்படி வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டை சுற்றி பார்க்க வரும் ...
Read More »திரைக்குப் பின்னால் வாசுகி பாஸ்கர்
பெண்களுக்கு ஆடை வடிவமைப்பில் ஆர்வம் அதிகம். திரையுலகில் ஆடை வடிவமைப்பு மிக முக்கியமான துறை. தமிழ்த் திரையுலகில் ஓர் ஆடை வடிவமைப்பாளராகத் தனி முத்திரை பதித்துவருகிறார் வாசுகி பாஸ்கர். இவர் இசையமைப்பாளர் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி. பாஸ்கரின் மகள். எப்படி ஆடை வடிவமைப்பு துறைக்குள் வந்தீர்கள்? தனியாக ஃபேஷன் டிசைனிங் செய்யலாம் என்றுதான் படித்துக்கொண்டிருந்தேன். அப்போது பாரதிராஜா சார் ‘கண்களால் கைது செய்’ படத்துக்குப் பணியாற்ற அழைத்தார். அப்படித்தான் சினிமா துறைக்குள் வந்தேன். அதற்குப் பிறகு அப்படியே வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது ‘சென்னை ...
Read More »சன்னி லியோனின் வாழ்க்கை- ஆவணப்படமாக வெளியானது
டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது. பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ...
Read More »‘கபாலி’ படத்துக்கு பாடல் எழுதியதால் அதிக வாய்ப்பு- உமாதேவி
கபாலி படத்துக்கு பாடல் எழுதியதால் அதிக வாய்ப்புகள் வருவதாக கவிஞர் உமாதேவி மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். ரஜினியின் ‘கபாலி’ படத்தில் ‘மாயநதி’, ‘வீர துறந்தரா’ பாடல்களை எழுதியவர் கவிஞர் உமாதேவி. எம்.பில், பி.எச்.டி. பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவி பேராசிரியர். ‘கபாலி’க்கு பாடல் எழுதியது பற்றி அவரிடம் கேட்ட போது. பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்துக்கு ஒரு பாடல் எழுதினேன். ‘கபாலி’ படத்துக்கும் ரஞ்சித் சார், என்னை அழைத்து ஒரு பாடல் இருக்கு, எழுதுங்கன்னு சொன்னார். முதல் பாடலாக “மாயநதி” பாடல் எழுதினேன். அந்த ...
Read More »பாலா இயக்கத்தில் யுவன் – ‘சூப்பர் சிங்கர் பிரகதி
பாலா இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகனாக யுவனும், நாயகியாக பிரகதியும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து தனது படத்தில் கவனம் செலுத்தி வந்தார் இயக்குநர் பாலா. வேல.ராமமூர்த்தி எழுதிய புத்தக்கத்திலிருந்து சிறுபகுதியை எடுத்து திரைக்கதையை அமைத்து படமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தார். விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா உள்ளிட்டவர்களைக் கொண்டு இப்படம் தொடங்கவிருப்பதாக பாலா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இந்நிலையில், அப்படத்துக்கு முன்பாக முழுக்க புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க திட்டமிட்டார் பாலா. இதற்கான நடிகர், நடிகைகள் ...
Read More »அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம்
அனுஷ்கா வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில் நடித்த படங்களில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களே அமைந்தன. காதல் காட்சிகளிலும் டூயட் காட்சிகளிலும் மட்டுமே பயன்படுத்தினர். ஆனால் அருந்ததி படம் அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. அனுஷ்காவை மையப்படுத்திய அந்த படம் அவரது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியது. மந்திரவாதியிடம் ஆக்ரோஷமாக மோதும் காட்சிகளில் மிரளவைத்தார். அதன்பிறகு முன்னணி டைரக்டர்கள் பார்வை அவர் பக்கம் திரும்பியது. ...
Read More »இயக்குநராகும் நடிகர் தனுஷ்
தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ், இயக்குநர் ஆகிறார். முதன்முதலாக அவர் ஒரு படத்தை டைரக்டு செய்கிறார்.நடிகர் தனுஷ், டைரக்டர் கஸ்தூரிராஜாவின் இளைய மகன் ஆவார். இவருடைய அண்ணன், டைரக்டர் செல்வராகவன். கஸ்தூரிராஜா டைரக்டு செய்த ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் கடந்த 2002-ம் ஆண்டில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமானார். காதல் கொண்டேன், திருடா திருடி, தங்க மகன், படிக்காதவன், யாரடி நீ மோகினி, மாரி, மாப்பிள்ளை, ஆடுகளம், வேங்கை, மரியான், நையாண்டி, வேலையில்லாத பட்டதாரி உள்பட இதுவரை 29 படங்களில் ...
Read More »விருப்பங்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர் – அமிதாப் பச்சன்
நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய பேத்திகள் நவ்யாவுக்கும் ஆராத்யாவுக்கும் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடு குறித்தும், பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் கூறியிருக்கும் அமிதாப் தன் பேத்திகளை பெண்ணினத்துக்கு உதாரணமாக வாழ வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் இரு பேத்திகளுக்கு மட்டுமின்றி, இந்தக் கடிதம் எல்லா பேத்திகளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: என் அன்புக்குரிய நவ்யா, ஆராத்யாவுக்கு… நீங்கள் இருவரும் உங்களின் மென்மையான தோள்களில் நீண்ட ...
Read More »எம்.ஜி.ஆர்., பேரன் நடிக்கும் ‛ஓடு குமார் ஓடு
சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. இன்றைய கள்ளக்காதல் கொலைகள் என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ஓடு குமார் ஓடு படம். ஐடி துறையில் ...
Read More »