தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வெள்ளைக்கார பெண் வேடத்தில் நடித்து வந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நடிகை ஆண்ட்ரியன். இவரது உறவினர்கள் பாண்டிச்சேரியில் உள்ளனர்.
அதனால் அடிக்கடி பிரான்சுக்கும், பாண்டிச்சேரிக்கும் பறந்து கொண்டிருப்பார். பிரான்சில் தொலைக்காட்சி தொடர் மற்றும் நாடகங்களில் நடித்து வரும் ஆண்ட்ரியன். பாண்டிச்சேரிக்கு வரும்போது தமிழ் படங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டு சிறுசிறு வேடங்களில் நடித்தார்.
தற்போது புதுமுக இயக்குனர் எம்.எஸ்.எஸ் இயக்கும் மேல்நாட்டு மருமகன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். கதைப்படி வெளிநாட்டிலிருந்து தமிழ் நாட்டை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணியாக நடிக்கிறார். வந்த இடத்தில் ஹீரோ ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டுதமிழ் நாட்டு மருமகளாக எப்படி மாறுகிறார் என்பதுதான் கதை.
ஆண்ட்ரியன் அடிக்கடி பாண்டிச்சேரி வருவதால் அவருக்கு தமிழ் ஓரளவுக்கு நன்றாக பேசத் தெரியும். அதனால் படத்துக்கு ஆண்டரியனே தமிழில் ட்பபிங் பேசியுள்ளார்.
வெளிநாட்டு நடிகை ஒருவர் தமிழில் டப்பிங் பேசியிருப்பது இதுவே முதல் முறை என்கிறார்கள். எமி ஜாக்சன் போல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் கொண்டிருக்கிறார் ஆண்ட்ரியன்.
Eelamurasu Australia Online News Portal