சன்னி லியோனின் வாழ்க்கை- ஆவணப்படமாக வெளியானது

டொரான்ட்டோ சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை சித்தரிக்கும் ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்ட கரஞ்சித் கவுர் வோரா கனடாவில் வசித்துவந்த தனது பெற்றோருடன் வாழ்ந்தபடி, மாடலிங் துறையில் கால் பதிக்க முயன்றார். பூசி மெழுகினாற்போன்ற மேனி, குள்ளமான உருவம் என பல்வேறு புறக்கணிப்புக்குள்ளான அவருக்கு அந்தரங்க காட்சிகளை காசுக்கு விற்கும் ‘நீலப்பட’ உலகம் சிகப்பு கம்பளம் விரித்து, ஒரு புதியபாதைக்கு பச்சைக்கொடி காட்டியது.

பாலுறவு காட்சிகளை பாலபாடமாக விளக்கும் நீலப்பட உலகத்துக்காக ஆடைகளுடன், வெட்கம், நாணம் போன்றவற்றையும் துறந்த கரஞ்சித் கவுர், தனது சகோதரரான சன்னி என்பவரின் பெயரில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலான நீலப்பட நாயகியாக வலம் வந்தார்.

பின்னர், பாலிவுட் படங்களில் கதாநாயகியாக நுழைந்த சன்னி லியோனின் வாழ்க்கையை பிரபல பாலிவுட் பெண் இயக்குனரான தீபா மேத்தாவின் சகோதரரான திலிப் மேத்தா, ‘மோஸ்ட்லி சன்னி’ என்ற ஆவணப்படமாக தயாரித்துள்ளார். கரஞ்சித் கவுர் மற்றும் பாலிவுட் நாயகி வேடத்தில் சன்னி லியோன் நடித்துள்ளார்.

கனடாவில் உள்ள டொரான்ட்டோ நகரில் நடைபெற்றுவரும் 41-வது சர்வதேச திரைப்பட விழாவில் ‘மோஸ்ட்லி சன்னி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. சன்னி லியோனின் கணவரான பிரபல அமெரிக்க தொழிலதிபர் டேவிட் வெப்பர், இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக தோன்றியுள்ளார்.