நடிகை ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து, நடிகை ராதா, 25ம் ஆண்டு திருமண நாளை, விமரிசையாக கொண்டாடினார். அலைகள் ஓய்வதில்லை படம் மூலம், தமிழ் திரையுலகில், அறிமுகமான நடிகை ராதா, 50; தமிழ், தெலுங்கு, மலையாளம் என, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது சகோதரி அம்பிகாவும், இவரும் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளனர்.
1981 முதல், 1991 வரை, தமிழ் திரைப்படத்தில் கோலோச்சிய ராதா, 1991ல், ராஜசேகரன் என்பவரை திருமணம் செய்து, மும்பையில், செட்டில் ஆனார். தற்போது தனியார், டிவிக்களில் நடக்கும் நடன நிகழ்ச்சிகளில், நடுவராக பணியாற்றி வரும் ராதா, நேற்று தன், 25வது திருமண நாள் விழாவை, கேக் வெட்டி கொண்டாடினார்; நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றனர். நடிகை ஸ்ரீப்ரியா, இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்டோர் நேரில் வாழ்த்தினர்.
இளம் நடிகையர் அமலாபால் உள்ளிட்டோர், திருமணமான ஓரிரு ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றுள்ள நிலையில், பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியாவை தொடர்ந்து, ராதாவும், 25வது திருமண நாள் விழாவை கொண்டாடி உள்ளார்.
ராதாவின் மகள்கள் துளசி, கார்த்திகா இருவரும், தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றனர். ராதாவுக்கு, விக்னேஷ் என்ற மகனும் உள்ளார்.
Eelamurasu Australia Online News Portal