நபர் ஒருவர் 35 வருடங்களுக்கு முன்னர் தனது விந்தணுவை தானமாக கொடுத்து 19 குழந்தைகள் பிறந்துள்ளது. விந்தணுவை தானமாக கொடுத்த அவுஸ்திரேலியாவின் மெல்போனை சேர்ந்த நபர் தற்போது பாரிய பிரச்சனையை சந்தித்துள்ளார். 1981 ஆம் ஆண்டு Ian Wood என்பவர் தனது விந்தணுவை விக்டோரியா இனப்பெருக்க சிகிச்சை ஆணையத்திற்கு வழங்கியுள்ளார். இதன் மூலம், 19 குழந்தைகள் பிறந்துள்ளது. 15 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் அடங்குகின்றனர்.
Read More »அவுஸ்திரேலியமுரசு
பறக்கும் விமானத்தில் சண்டை போட்ட பயணிகள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பயணிகளிடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அவர்கள் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பயணிகளின் சண்டையைத் தடுக்க விமான ஊழியர்கள் முயன்றும் அதில் எவ்வித பயனும் இல்லாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சிட்னிக்கே திரும்பச் சென்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அதன் பின்னர் சண்டையிட்ட இருவரும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதன் பின்னரே விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. பிஸ்ட்ஸ் ஃபைட் (fist ...
Read More »அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த தமிழ் குடும்பத்தின் நிலை !
அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த நடேசலிங்கம் – பிரியா என்ற ஈழத் தமிழ் குடும்பத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதற்கான முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், நாடுகடத்தும் முடிவை திரும்ப பெற முடியாது என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடையே பேசிய பீட்டர் டட்டன் “அக்குடும்பம் நீதிமன்றத்தில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதில் அனைத்திலுமே அவர்கள் அகதிகள் இல்லை என அறியப்பட்டது” எனக் கூறியுள்ளார். “காணாமல் போதல் சம்பவங்கள் ...
Read More »மாணவி படுகொலைக்கு காரணமாகிய 20 வயது இளைஞன்?
மெல்பேர்னில் தமிழர் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரை தாங்கள் கைது செய்துள்ளதாக விக்டோரிய காவல் துறையினர் அறிவித்துள்ளனர். மெல்பேர்ன் Greensborough பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் இன்று முற்பகல் 11.40 மணியவில் அவர் வீட்டில் வைத்து கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களாக மாணவியின் படுகொலை மர்மம் நிறைந்ததாக காணப்பட்டது. அத்துடன் கொலைக்கான எந்த ...
Read More »அவுஸ்திரேலியாவில் நடைப்பயிற்சி சென்ற தாய் சடலமாக மீட்பு!
நடைப்பயிற்சி சென்ற தாய், 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்கு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அவுஸ்திரலேயாவின் மாகாணத்தை சேர்ந்தவர் ஃபெலிசிட்டி சாட்போல்ட் (36). இவர் கடந்த 2010ம் ஆண்டு crew (36) என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலே ஃபெலிசிட்டி கர்ப்பம் தரித்தார். தான் எதிர்பார்த்ததை விட 7 மாதங்களுக்கு முன்னதாகவே ஃபெலிசிட்டிக்கு, 2.5 கிகி எடையில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. அதில் ஒரு குழந்தை மிகவும் பலவீனமாக இருப்பதால் ஒரு ...
Read More »மெல்போர்ன் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சு!
மெல்போர்னில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீசி வருகிறது. ஆடும் லெவனில் தமிழக வீரர் விஜய் சங்கர் இடம்பெற்றுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் சிட்னியில் நடந்த முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்னில் வென்றது. அடிலெய்டில் நடந்த 2-வது போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சமநிலையில் ...
Read More »அவுஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்!
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ன் வடக்கு பகுதியில் தமிழ்மக்கள் செறிந்து வாழும் Bundoora பகுதியில் இருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்கட்டுள்ளது. நேற்று (17) அதிகாலை பற்றைகளின் மறைவிலிருந்து வழிப்போக்கர்களால் பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இனம் காணப்பட்டுள்ள இளம்பெணின் பெயர் Aya Masarwe (வயது 21) என தெரியவந்துள்ள அதேவேளை குறித்த பெண் இஸ்ரேலை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. குறித்த பெண் LaTrobe – Bundoora பல்கலைக்ககழகத்தில் கல்வி கற்று வந்துள்ளார். இதற்காக அவர் அவுஸ்திரேலிய தற்காலிக விசாவில் தங்கியிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »மிக மோசமான நிலைமையில் அவுஸ்திரேலியா!
இரண்டாம் உலக போருக்கு பின்னர் மிக மோசமான நிலைமை ஒன்று அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளது. 1939ஆம் ஆண்டிற்கு பின்னர் அதாவத சரியாக 80 ஆண்டுகளின் பின்னர் அவுஸ்திரேலியா முகம் கொடுத்துள்ள மிக மோசமான வெப்பநிலை தற்போது ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வீசும் அனல் காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை சுமார் 45 டிகிரி செல்சியஸை எட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வானிலை நிலைய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். அடுத்த நான்கு நாட்களில் சராசரி அளவைக் காட்டிலும் அங்கு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று அவர்கள் கூறினர். ...
Read More »ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டம்!
இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, தற்போது ஆஸ்திரேலியா அணி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறது. 25.4 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பிஞ்ச் 6 ரன்,அலெக்ஸ் காரி 18 ரன்,உஸ்மான் கவாஜா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பீட்டர் ஹேன்ட்ஸ் ...
Read More »ஆஸ்திரேலிய ஓபன்: முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் ஏமாற்றம்
ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார். கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார். இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் சிறப்பாக விளையாடி கைப்பற்றினார். ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை 3-6, 3-6 என இழந்தார். இதனால் 1-2 எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
Read More »