ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் 1-2 எனத் தோல்வியடைந்து வெளியேறினார்.
கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் சிறப்பாக விளையாடி கைப்பற்றினார். ஆனால் 2-வது மற்றும் 3-வது செட்டை 3-6, 3-6 என இழந்தார். இதனால் 1-2 எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.