அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற விமானத்தில் பயணிகள் சண்டை போட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. பயணிகளிடையே ஏற்பட்ட சண்டையைத் தொடர்ந்து அவர்கள் கடுமையான கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
பயணிகளின் சண்டையைத் தடுக்க விமான ஊழியர்கள் முயன்றும் அதில் எவ்வித பயனும் இல்லாமல் போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சிட்னிக்கே திரும்பச் சென்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அதன் பின்னர் சண்டையிட்ட இருவரும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன் பின்னரே விமானம் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.
பிஸ்ட்ஸ் ஃபைட் (fist fights) என்ற வீடியோவை திங்களன்று முகநூலில் கோல்ட் கோஸ்ட் மனிதன் ரிகோ டேவிட் காரில்லி பதிவிட்டுள்ளார்.
அந்த காணொளி அவர், “எங்கள் விமானம் தாமதமாக அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த நபர் கடுமையான குடிக்க தொடங்கியது, விமானத்தில் சுமார் 20 நிமிடங்கள் அவர் சண்டையிட்ட தொடங்குகிறார் ” என்று ரிகோ டேவிட் காரில்லி குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.