அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்ரேலியாவில் கிரிக்கெட் அணியில் தமிழ்ப்பெண்!

பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல்  (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார். கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக  தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார். தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம்  ஏற்பட்டது என்றார். ...

Read More »

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ! சொத்துக்கள் பல சேதம்!

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் அழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையினை அந்நாட்டு அவசரகால சேவைகள் மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தென்கிழக்கு மெல்போர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க் பகுதியில் பாரிய தீப்பரவல் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விக்டோரியா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் புதிய அமைச்சரவை அதிரடியாக நியமனம்!

அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மொரிஸ்ஸன் (Scott Morrison), புதிய அமைச்சரவை நியமனம் குறித்து அறிவித்துள்ளார். செனட்டர் லிண்ட ரெனால்ட்ஸ் (Linda Reynolds), அவுஸ்திரேலியாவின் புதிய தற்காப்புத் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையிலிருந்து சிலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு வெளியானது. வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் லிபரல் (Liberal) கட்சி பெரும் தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் முன்னுரைத்துள்ளன. மொரிஸ்ஸன் (Morrison) தலைமையிலான கூட்டணி அரசாங்கம், அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளையும் தக்கவைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவுஸ்திரேலியத் ...

Read More »

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் – ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்!

ஐதராபாத்தில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வந்த வேகத்தில் வெளியேறியபோதும், அடுத்து வந்த வீரர்கள் நிதானமாக விளையாடினர். ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடைபெறுகிறது. டாஸ் ...

Read More »

இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வென்றது. அடுத்து இரு அணிகளும் 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ...

Read More »

அவுஸ்திரேலிய வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ளும் காவல் துறை  வாகனங்களில் Number plate recognition வசதிகொண்ட விசேட கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விக்டோரியா மாநிலத்தில் இந்த விடயம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதியில் செல்லும் வாகனங்களின் இலக்கத்தகடுகளை ஒரே பார்வையில் ஸ்கான் செய்யப்படும். அதனை iPad app வழியாக காவல் துறைகுத் தகவல் கொடுக்கும் வகையில் இக்கமரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பதிவு செய்யப்படாத அல்லது திருடப்பட்ட வாகனங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்துச் செய்யப்பட்டவர்களை இலகுவாக கண்டறிய முடியும்.

Read More »

அவுஸ்திரேலிய அழகி போட்டியில் தமிழ் பெண்!

அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் தமிழ் பெண் ஒருவர் அழகிப்போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கியுள்ளார். பெனிட்டா சக்தி என்ற பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார். தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார். அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளர். அந்த போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் பெனிட்டா தன்னை தயார்படுத்தி வருகிறார். “என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த ...

Read More »

அவுஸ்திரேலியாவில் 6 பேரை கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரத்தில் 2017ஆம் ஆண்டில் பாதசாரிகள் மீது வாகனத்தை மோதிய ஓட்டுநருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈராண்டுகளுக்கு முன்னர் மெல்பர்னில் தாக்குதலை நடத்திய 29 வயது ஜேம்ஸ் கார்கசுலாஸ் (James Gargasoulas) எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு குறைந்தபட்சம் 46 ஆண்டுகளுக்கு மறுக்கப்பட்டது. தாக்குதலில் ஆறு பேர் உயிரிழந்தனர். அவர்களில் குழந்தை ஒன்றும் 10 வயதுச் சிறுமியும் அடங்குவர். அவுஸ்திரேலிய வரலாற்றில் ஒரேநேரத்தில் பலர் கொல்லப்பட்ட ஆக மோசமான சம்பவங்களில் ஒன்று இதுவென்று அவுஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.

Read More »

அவுஸ்திரேலியாவில் வீட்டுக்கடன்களை வழங்கி பாரிய சிக்கலில் சிக்கிய வங்கி!

அவுஸ்திரேலியாவில் Westpac வங்கிக்கு எதிராக class action எனப்படும் கூட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடன்பெறுவதற்கு தகுதியில்லாத வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியது தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் Westpac வங்கி வழங்கிய வீட்டுக்கடன்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்படவுள்ளது. கடனை மீளச்செலுத்தமுடியாத வாடிக்கையளார்களுக்கு வீட்டுக்கடன்களை வழங்கியதன் மூலம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் வங்கி வரைமுறைகளை மீறியுள்ளதாகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் ...

Read More »

அவுஸ்திரேலிய முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எடுத்த முடிவு!

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், அரசாங்கத்தில் இரண்டுமுறை உயரிய பொறுப்பு வகித்தவருமான ஜுலி பிஷப், தனது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளதாக கூறியுள்ளார் நீண்ட காலமாக நிலவிவந்த வதந்திகளுக்கு முடிவு கட்டும் வகையில் தனது இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார். இதேவேளை, லிபரல் கட்சியின் முதலாவது பெண் துணைத் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் முதல் பெண் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியமையை எண்ணி பெருமை அடைவதாகவும் கூறியுள்ளார். ஜுலி பிஷப், அவுஸ்திரேலியாவில் ...

Read More »