பதினைந்து வயதுக்குக் கீழ்ப்பட்ட நியுஸ் சவுத்வெல் (NSW) மாநில பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளார் சிந்துஜா சுரேஷ்குமார்.
கிரிக்கெட் மாத்திரமன்றிப் பல விளையாட்டுகளில் விருதுகளை பெற்றுள்ளார். இவ் வருடம் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். பல விளையாட்டுகளில் பங்குபற்றுவதால் நேரத்தை முகாமை செய்யும் முகமாக தமது சுய கற்றலை புகையிரதவண்டிலும் மகிழுர்திலும் பயணிக்ககும் போது மேற்கொள்கின்றார்.
தனது தம்பி விளையாடும் போது பந்து எடுத்துக் கொடுத்து உதவி செய்த போது கிறிக்கெட்பயிற்றுவிப்பாளரால் தன்னையும் அழைத்து வியையாடச் செய்தமையால் கிறிக்கெட்டில் பங்கேற்கும் சந்தர்பம் ஏற்பட்டது என்றார்.
துடுப்பெடுத்தாடுதலும் விக்கெட் கிப்பிங் தனக்கு விருப்பமானது என்றார் சிந்துஜா சுரேஷ்குமார்.
நன்றி
www.sbs.com.au
Eelamurasu Australia Online News Portal