அவுஸ்திரேலியாவின் அடிலெயிட் மாநிலத்தில் தமிழ் பெண் ஒருவர் அழகிப்போட்டியில் தேசிய அளவில் இறுதி போட்டிக்கு தெரிவாகியிருக்கியுள்ளார்.
பெனிட்டா சக்தி என்ற பெண்ணே இவ்வாறு தெரிவாகியுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை பிறப்பிடமாக கொண்ட பெனிட்டா, கடந்த 7 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்.
அங்கிருக்கும் தனியார் வங்கியில் கடந்த 3 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.
அழகிப்போட்டியில் தேசிய அளவில் தெரிவாகியிருப்பதால் தனது வேலையை ராஜினாமா செய்துள்ளர்.
அந்த போட்டிக்காக முழு ஈடுபாட்டுடன் பெனிட்டா தன்னை தயார்படுத்தி வருகிறார்.
“என் கணவர் எனக்கு உதவியாக இருப்பதால் என்னால் இந்த அளவுக்கு சாதிக்க முடிகிறது. பல தடைகளை கடந்து பெண்கள் சாதிக்க வேண்டும். அப்படி சாதித்தால் நிச்சயம் உலகம் உங்களை திரும்பி பார்க்கும்” என பெனிட்டா கூறுகிறார்.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் MRS கேலக்சி அவுஸ்திரேலியா 2019 நடைபெற உள்ளது.
Eelamurasu Australia Online News Portal