அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பாரியளவிலான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேலும் அழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையினை அந்நாட்டு அவசரகால சேவைகள் மையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த புதன்கிழமை முதல் பரவிவரும் காட்டுத்தீயினால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
தென்கிழக்கு மெல்போர்ன் பகுதியில் இருந்து 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஸ்டேட் பார்க் பகுதியில் பாரிய தீப்பரவல் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் விக்டோரியா மாகாணத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தீ பரவல் பதிவாகி இருந்ததுடன் இதனால் பாரியளவிலான சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.